வியாபாரம் தான் முக்கியம்!..ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திட்டம் பலிக்குமா?..லைக்காவின் பதில் என்னவாக இருக்கும்?..
ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க ரஜினியின் அடுத்த படத்திற்கான வேலைகள் தடாலடியாக போய்க் கொண்டிருக்கின்றன.
ரஜினியின் அடுத்த இரண்டு படங்களை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க போவதாக சில தகவல்கள் வெளிவந்தன. அதில் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தியும் மற்றொரு படத்தை மணிரத்னமும் இயக்கபோவதாக செய்திகள் வெளிவந்தன. இதில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் ஒரு படத்தை இயக்க போகிறார் எனவும் அந்த படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்க போகிறார் எனவும் தகவல் வந்தன.
இதையும் படிங்க : விநியோகஸ்தர்களை அலறவிடும் உதயநிதி… “அவுங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்”… பிரபல பத்திரிக்கையாளர் ஓப்பன் டாக்…
மேலும் படத்தில் நடிகர் அதர்வா தான் ஹீரோ என இருந்த நிலையில் சம்பள பிரச்சினையில் அதர்வா விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக இருக்கபோவதால் கிரிக்கெட் ஆட தெரிந்த ஒரு நடிகரை ஹீரோவாக போடலாம் என ஐஸ்வர்யா கருதுகிறாராம்.
அந்த வகையில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகர் விக்ராந்த் இவர்களை நடிக்க வைக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்க ஒரு புறம் பெரிய படக்கம்பெனியான லைக்கா தயாரிப்பதால் அவர்கள் வியாபாரத்தை தான் எதிர்பார்ப்பார்கள், அதனால் பெரிய நடிகர்கள் நடித்தால் தான் பட வியாபாரமும் நடக்கும் என லைக்கா நிறுவனம் எண்ணினால் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வகையில் ஏற்கெனவே ரஜினி இருப்பதால் அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய வியாபாரம் ஆகும் என கோடம்பாக்கத்தில் கூறிவருகின்றனர்.