கரடி வேல பார்த்த லாரன்ஸ்! அனி-லோகேஷ் நடிக்கும் படத்திற்கு வந்த ஆப்பு
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் ஒரு தமிழ் சினிமாவே திரும்பி பார்க்க வைத்தார். அதுவும் கமல் , விஜயை வைத்து யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்தார். மீண்டும் விஜயுடன் லியோ படத்தில் இணைந்திருக்கிறார் லோகேஷ். அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவே இருக்கின்றன.
காரணம் இதற்கு முந்தைய படமான மாஸ்டர் படத்தின் வெற்றிதான். இது ஒரு புறம் இருக்க லோகேஷ் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஏற்கெனவே ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் தயாராகி வரும் சிங்கப்பூர் சலூன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கத்தில் அனிருத்துடன் லோகேஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தின் அப்டேட் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்தது. அந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருந்தது.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்தப் படத்திற்கு ஃபுல் ஸ்டாப் வைத்து விட்டனர். இதற்கு பின்னனியில் அமைந்த சம்பவத்தை வலைப்பேச்சு பிஸ்மி கூறியதாவது: சன்பிக்சர்ஸ் நிறுவனம் இதை பற்றி நடிகரும் மாஸ்டருமான லாரன்ஸிடம் விசாரித்தார்களாம். ஏனெனில் ஏற்கெனவே அன்பறிவு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அவர்களின் பெர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்று லாரன்ஸ் அனுப்பிவிட்டாராம்.
இதை பற்றி லாரன்ஸ் ஒரு வேளை நாசுக்காக சன்பிக்சர்ஸிடம் சொல்லியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் லாரன்ஸிற்கும் இடையில் ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது. இதற்கிடையில் திடீரென அனிருத்தும் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். ஆக மொத்தத்தில் மொத்த படமும் டிராப் ஆகிவிட்டது என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க :அஜித் படத்தை தொடர்ந்து ரஜினி படத்திற்கும் வந்த சிக்கல்! ஆனா தலைவர் ரூட்டே வேற