நயன்தாரா கல்யாணத்திற்கு காரணம் அட்லீயா? பயத்தில் விக்னேஷ் சிவன் போட்ட டீல்- பிரபலம் சொன்ன பகீர் தகவல்..

by prabhanjani |
nayan vignesh
X

பல ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் கடந்த ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் அவசவ அவசரமாக ஏற்பாடுகள் செய்து, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்டதற்கான காரணத்தை வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

jawan

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இயக்குநர் அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து தான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்குமாறு வந்து கேட்டுள்ளார். ஏற்கனவே ஸ்ரீதேவி, ஹேமாமாலினி என பல ஹீரோயின்கள் தமிழில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று, உச்சம் தொட்டுள்ளனர்.

nayan vignesh sivan

அதே போல பாலிவுட் சென்று முயற்சித்து பார்க்கலாம் என நயன்தாரா முடிவெடுத்துவிட்டார். அதுவும் முதல் படமே ஷாருக்கான் உடன் என்றால் கசக்குமா என்ன? இதனால் விக்னேஷ் சிவனுக்கு பயம் வந்துவிட்டது. பாலிவுட் சென்று அடுத்தடுத்து பங்களில் அவர் பிசியாகி விட்டால், திருமணம் செய்ய பல ஆண்டுகள் ஆகிவிடுமே என்று யோசித்த விக்னேஷ் சிவன், என்னை திருமணம் செய்துகொண்டு, எங்கு வேண்டுமானாலும் செல் என்று ஓகே கண்மணி பட துல்கர் சல்மான் போல டீல் பேசியுள்ளார்.

srk atlee

இதனையடுத்து கடந்த ஆண்டு அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். நயன்தாராவின் முதல் பாலிவுட் படமான ஜவான் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெற்றியை பொருத்து, நயன்தாராவுக்கு அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தால், அவர் இந்தி படங்களில் நடிக்க சென்றுவிடுவார் என அந்த பேட்டியில் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே அசின் தமிழில் உச்சத்தில் இருந்த போது, பாலிவுட் சென்று ஃபீல்டு அவுட் ஆகி திருமணம் செய்துகொண்டார். பாலிவுட் சென்ற பலரில் சிலர் தான் ஹிட் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க- தொட்டா வழுக்கிட்டு போயிடும்!.. சைனிங் உடம்பை பல ஆங்கிளிலும் காட்டும் வாணி போஜன்…

Next Story