பிக்பாஸ் பிரபலங்களை குறிவைத்து தூக்கும் தமிழ் சினிமா!.. தளபதி -67 களமிறங்குகிறாரா இந்த போட்டியாளர்?..
வாரிசு படத்தின் அடைமழை ஓய்ந்த நிலையில் அடுத்ததாக தளபதி 67 படத்தின் அப்டேட்களை கேட்க தொடங்கி விட்டனர் ரசிகர்கள். இணையத்தில் தளபதி 67 படத்தின் ஹேஷ் டேக்குகள் தான் வைரலாகி வருகின்றது. இதற்காகவே வாரிச் படத்தினை பார்க்க லோகேஷும் த்ரிஷாவும் தியேட்டர்க்கு சென்று போய் பார்த்தனர்.
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் தளபதி 67. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு விஜயுடன் ஜோடி சேருவதை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் மிஷ்கின், அர்ஜூன் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கூடுதல் தகவல் என்னவெனில் தளபதி 67 படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாகவே பிக்பாஸில் மிகவும் பிரபலமான போட்டியாளரை குறிவைத்து தங்கள் படங்களில் நடிக்க வைக்கின்றனர்.
துணிவு படத்தில் கூட பிக்பாஸ் காதல் ஜோடியான அமீர் பாவ்னியை நடிக்க வைத்து அதன் மூலம் விளம்பரப்படுத்திக் கொண்டனர். அதே வகையில் தளபதி 67 படத்திலும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளரான ஜனனியை நடிக்க வைக்க முயற்சிப்பதாக இணையத்தில் செய்திகள் கசிந்துள்ளது.
தன் கொஞ்சும் பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஜனனி. இலங்கையை சேர்ந்தவரான இவருக்கு பிக்பாஸில் வருவதற்கு முன்னரே ஆர்மிகளை உருவாக்கி அலப்பறைகள் செய்தனர். இந்த நிலையில் தான் இவரை தளபதி 67 படக்குழு அணுகியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.