‘ரெட்ரோ’ படத்தில் இளையராஜாவின் பாடல்! வேலையை காட்டுவாரா நம்ம இசைஞானி?

suriya
Retro: சில படங்களை பார்க்கும் பொழுது ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்துவது மாதிரி இருக்கும். கிட்டத்தட்ட கங்குவா படத்திற்கு அப்படியான ஒரு உணர்வை தான் ஏற்படுத்தியது. பார்த்த உடனேயே அந்த படத்தின் தலைப்பாகட்டும் அதன் புரமோஷன் ஆகட்டும் அது எல்லாம் பார்க்கும் போதே ஒரு வீடியோ கேம் மாதிரி இருக்கிறதே என்றுதான் தோன்றியது. கடைசியில் அந்தப் படம் எந்த நிலைமைக்கு போச்சு என எல்லோருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 2 திரைப்படமும் அப்படியான ஒரு எண்ணத்தை தான் கொடுத்தது .ஒரு வேளை ரெட்ரோ என்ற அந்த தலைப்பின் காரணமாக கூட இருக்கலாம்.
தலைப்பு என்பது வெகு மக்களை ஈர்க்கும் மாதிரியாக இருக்க வேண்டும். அவர்களை தியேட்டரை நோக்கி வரவழைக்க வேண்டும். ஆனால் ரெட்ரோ திரைப்பட குழு ஒரு மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸை மைண்டில் வைத்து அவர்களை டார்கெட் ஆடியன்ஸ் ஆக வைத்து படம் எடுக்கும் பொழுது அந்தப் படம் பெரிய வணிக வெற்றி கிடைக்காது. கிட்டத்தட்ட ரெட்ரோ திரைப்படத்தின் ஒவ்வொரு விஷயத்தைப் பார்க்கும் பொழுதும் அப்படித்தான் தெரிகிறது. சூப்பரான கதை உள்ளே இருந்தாலும் படத்தின் நேரம் என்பது அதிகமாக இருந்தால் நமக்கு போர் அடித்து விடும்.
இந்த படத்திலும் அந்த சிக்கல் இருக்கிறது. மற்ற ஹீரோக்களை விட சூர்யா திறமையான ஒரு நடிகர். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த உழைப்பை கொடுப்பதில் கொஞ்சம் கூட சளைக்க மாட்டார் .அதே நேரம் இவ்வளவு உழைப்பையும் நாம் எதுக்கு போடுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். அதுதான் சிக்கலான ஒன்று. இதுவே ஒரு நல்ல கதைக்காக இவ்வளவு உழைப்பை போட்டிருந்தால் அதிக விளைச்சலை தந்திருக்கும். இந்த படத்தின் கதையை கேட்ட உடனேயே அவருக்கு தோன்றியிருக்க வேண்டும். ரசிகர்களை திருப்திப்படுத்துவது மாதிரி எந்த ஒரு விஷயமும் இந்த படத்தில் இல்லை.
இதை எப்படி சூரியா நோட்டீஸ் பண்ண தவறினார் என தெரியவில்லை. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் படத்தில் இளையராஜாவின் பாடலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது .ரஜினியின் செனரீட்டோ பாடல் இந்த படத்தில் உள்ளது. ஆனால் டைட்டில் கார்டில் இளையராஜாவுக்கு நன்றி என சொல்லி இருந்தார்கள். அப்படி போட்டு இருந்தாலும் இளையராஜா நாளைக்கு இவ்வளவு கோடி வேண்டும் என இந்த பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் விடவும் தயங்க மாட்டார்.

இளையராஜாவிடம் கேட்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை. வெறும் நன்றி மட்டும் சொன்னால் போதுமா? அதைப்போல கங்கை அமரனின் பாடலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது .இளையராஜாவின் தம்பி அவர் எப்படிப்பட்டவர். அதனால் இளையராஜா 5 கோடி கேட்டால் கங்கை அமரன் 4 1/2 கோடி கேட்க கூடியவர். ஆனால் முறையான அனுமதி பெற்றார்களா என்பதை பொறுத்துதான் இந்த ஒரு பிரச்சனை எழும் என இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.