Cinema History
கில்லி படத்தின் ‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கு பின்னால இவ்ளோ பெரிய சோகமா?..
தற்போது தமிழ்ப்பட உலகில் பல படங்கள் ரீரிலீஸாகி வருகின்றன. விரைவில் தளபதி விஜயின் கில்லி படம் ரீரிலீஸாக உள்ளது. 2004ல் கில்லி படம் வந்த போது அதில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடல் எதுன்னா அது கொக்கர கொக்கரக்கோ தான். படத்தில் விஜய், திரிஷா டான்ஸ் பட்டையைக் கிளப்பும்.
அந்த நேரத்தில் பட்டி தொட்டி எங்கும் எந்த விழாக்கள் என்றாலும் தவறாமல் இடம்பெற்றது இந்தப் பாடல் தான். படத்தில் தான் இந்தப் பாடல் கொண்டாட்டமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் படமாக்கப்பட்ட நேரமோ சோகமயமானது. இது குறித்து படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் எஸ்.கோபிநாத் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…
இதையும் படிங்க… 14 முறை கமலுடன் மோதிய அஜித் படங்கள்!.. ஜெயித்தது யாரு?.. உலக நாயகனா? அல்டிமேட் ஸ்டாரா?..
பாட்ஷா தான் அப்போது 50 கோடி வசூல்… இனி இப்படி ஒரு படம் வராதா என ஏங்கித் தவித்தவர்களுக்கு கில்லி வந்து 52 கோடியை வசூலில் ரஜினி படத்தை முந்தி சாதனை படைத்தது.
டிரெய்லர், பாடல்கள் எல்லாம் ஹிட்டானதும், படமும் அப்படியே பிக்கப் ஆகி சூப்பர்ஹிட்டானது. அந்த வகையில் கில்லி எப்பவுமே அல்டிமேட் தான். இந்தப் படத்தில் என் தந்தை இறந்ததும் மறுநாளே கொக்கரக்கோ பாடல் எடுத்தோம் என்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.
கொக்கரக்கோ பாடல் எனக்கு ஒரு பர்சனல் கனெக்ட். இந்தப்பாடல் எப்படின்னா எங்க அப்பா இறந்து மறுநாளே சூட் பண்ணுன சாங். ஊருல எங்கப்பாவுக்கு அடக்கம் எல்லாம் செஞ்சி முடிச்சிட்டு அப்படியே மறுநாள் காலையில கிளம்பி ஈவ்னிங் சூட் பண்ணின சாங் அது. ஏன்னா தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர்கள் எல்லாரும் ரெடி.
நான் மட்டும் ரெடியில்ல. உடனே நான் போன் பண்ணி சொன்னேன். என்ன பிளான் பண்ணினோமோ அப்படியே நடக்கட்டும். நான் வந்துடுவேன்னு சொன்னேன். அதே மாதிரி கிளம்பி வந்துட்டேன். சொன்ன மாதிரியே ஈவினிங் சூட்டிங் நடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.