ஜெயம் ரவியை தேடிப் போன லோகேஷ்!.. இது புது மேட்டரா இருக்கே?..
தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பவர் நடிகர் ஜெயராம். கிட்டத்தட்ட 20 வருட சினிமா வாழ்க்கையை இனிமையாக பயணித்த ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக தகவல் வெளியானது.
அந்தப் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் தான் ஜெயம் ரவி தற்போது மும்முரமாக இருந்து வருகிறார். 4 வருடங்கள் கழித்து நேரிடையாக திரையரங்கில் வெளியாகும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது.இவரின் சோலோவான நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘கோமாளி’.
கோமாளி படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அதனை அடுத்து ‘பூமி’ என்ற படம் ஓடிடியில் தான் வெளியானது. ஆனால் பூமி படம் மிகுந்த தோல்வியை தழுவிய படமாக அமைந்தது. அதன் பின்னர் மல்டி ஸ்டாரர் படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்தது. ஆகவே சோலோவாக களமிறங்கும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் எந்த மாதிரியான வரவேற்பை பதிவு செய்யப்போகிறது என அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனிடையில் ஜெயம் ரவியிடம் லியோ படத்தில் நடிக்கப் போவதாக சில தகவல்கள் வெளிவந்ததே உண்மைதானா? என்று கேட்கப்பட்டது. அதற்குஜெயம் ரவி ‘ நான் அகிலன் பட சூட்டிங்கில் இருந்தேன், அப்போது லோகேஷ் விக்ரம் பட சூட்டிங்கில் இருந்தார். இரண்டு படப்பிடிப்புகளும் ஒரே இடத்தில் நடைபெற்றது. அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தால் எல்லோரும் லியோ படத்தில் நடிக்கும் ஜெயம் ரவி என்று கேட்க தொடங்கினார்கள், ஆனால் லோகேஷ் ‘ மாநகரம்’ படம் முடிந்ததுமே என்னிடம் வந்து ஒரு கதை சொன்னார். ஆனால் அந்த நேரத்தில் என்னால நடிக்க முடியவில்லை, நல்ல இயக்குனர் லோகேஷ்’ என்று அந்த பேட்டியில் ஜெயம் ரவி கூறினார்.
இதையும் படிங்க : பாடும் போது ஏற்பட்ட ஃபீலிங்!.. வெறியேறி உள்ளாடையுடன் ஓடிய சந்திரபாபு.. நடந்தது இதுதான்!..
மேலும் கேமியோ ரோலில் முக்கியத்துவம் இருந்தால் கண்டிப்பாக நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் ஒரு ஹிண்டை பதிவு செய்திருக்கிறார் ஜெயம் ரவி.