காக்க வச்சி அல்வா கொடுத்த கமல்!.. அந்த ஹீரோ பக்கம் போன ஹெச்.வினோத்.. இதெல்லாம் நியாயமா?..

by sankaran v |
காக்க வச்சி அல்வா கொடுத்த கமல்!.. அந்த ஹீரோ பக்கம் போன ஹெச்.வினோத்.. இதெல்லாம் நியாயமா?..
X

KH233

சமீபத்தில் உலகநாயகன் கமலுக்கு அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன என்றும் அவர் திரையுலகில் ரொம்பவே பிசியாக உள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. அவற்றில் பிரபாஸின் கல்கி படம், மணிரத்னம் படம், அடுத்து எச்.வினோத் படம் என்று சொன்னார்கள்.

ஹெச்.வினோத் கமல் கூட்டணியில் படம் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக இருந்தது. இந்த மாத இறுதியில், அடுத்த மாதம், கடைசியில் ஜூன் மாதம், பிப்ரவரி மாதம் ஆரம்பிப்பதாக தகவல்கள் மாறி மாறி வெளியாயின. ஆனால் இப்போ அந்த ப்ராஜெக்ட் நடக்குமான்னே சந்தேகமாக இருக்கிறதாம். கமலை வைத்து ஹெச்.வினோத் படம் நடக்குமா என்றே தெரியலையாம்.

Kalki AD 2898

Kalki AD 2898

இந்தியன் 2, இந்தியன் 3, பிரபாஸுடன் கல்கி 2898, தக் லைஃப் என கமலுக்கு தொடர்ந்து படங்கள் இருக்கிறது. இதுக்கு இடையில வேற தேர்தல் பிரசாரம். இதெல்லாம் முடிஞ்சதும் தான் ஹெச்.வினோத் படமாம். அது கிட்டத்தட்ட 2025 மத்தியில் அல்லது இறுதிக்குச் சென்று விடுமாம். ஏற்கனவே தனுஷ் நடிக்க லலித் தயாரிப்பில் ஒரு படம் இயக்க இருக்கிறாராம் ஹெச்.வினோத்.

அதனால கமலோட ராஜ்கமல் நிறுவனத்தில் உடனடியாக தனது படத்தின் நிலை குறித்து பேச உள்ளாராம். அது தள்ளிப் போகும் பட்சத்தில் தன்னோட படத்திற்கான வேலையை ஆரம்பிக்க உள்ளாராம். தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஹெச்.வினோத் படம் என்றால் நடிப்பதற்கும் ஆர்வமாக உள்ளாராம்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு, சதுரங்க வேட்டை 2 என சூப்பர்ஹிட் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் தான் ஹெச்.வினோத். இவ்வளவு திறமை வாய்ந்த இயக்குனர் கிடைக்கும்போது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் என்றே சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கே.எச்.233 என தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்ட படத்தைத் தான் கமலுடன் இணைந்து எச்.வினோத் பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story