நடிகர் சிம்புவைப் பற்றி சினிமா உலகில் பல நெகடிவ்வான விமர்சனங்கள் இருந்து வந்தன. நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை அப்படி இப்படின்னு சொன்னாங்க. அவருக்கும் சொந்த வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் வந்ததால் திரையுலகில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல், மணிரத்னம் காம்போவுடன் கைகோர்த்து தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இனி அவர் விட்ட இடத்தைப் பிடிப்பாரா… அல்லது அவருடைய மார்க்கெட் உச்சத்தைத் தொடுமா என்று பார்ப்போம். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவாரா சிம்பு பற்றியும் அவர் நடித்து வரும் தக் லைப் படம் குறித்தும் இவ்வாறு தெரிவித்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
தக்லைஃப்ல யார் ஹீரோன்னு கமல் சொல்லணும். இல்லேன்னா சிம்பு சொல்லணும். துல்கர் சல்மான் முதலில் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் விலகுகிறார். இதற்கு சிம்பு காரணமில்லை. அந்த இடத்துல சிம்பு தான் பொருத்தமா இருப்பாருன்னு கொண்டு வர்றாங்க. அவர் என்ட்ரி வேறலெவல். அவரு வந்ததும் ஜெயம் ரவி விலகுறாரு. அவர் வந்தா தனக்கு முக்கியத்துவம் இருக்காதுன்னு விலகிடுறாரு.
இதையும் படிங்க… கோட் படத்தில் விஜயகாந்த்!.. விஜய் போட்ட கண்டிஷன்!. பதட்டத்தில் வெங்கட்பிரபு…
சிம்புவோட தனிப்பட்ட சோகங்களால் அவர் ஒரு கேப் எடுக்கறாரு. அதைப் பயன்படுத்தினவங்க தான் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்னு எல்லாரும் வர்றாங்க. ரஜினி, விஜய், அஜீத் வரிசையில தான் சிம்பு நிக்கிறாரு. இன்றும் அவரோட ரசிகர்கள் அப்படியே இருக்காங்க.
சிம்புவுக்காக தக்லைப் கதையே மாறுது. துல்கர் சல்மான், ஜெயம் ரவி என 2 கேரக்டரையும் ஒரே கேரக்டரா கொண்டு வர்றாரு. அப்படின்னா அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்னு பாருங்க. இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு அசைக்க முடியாத இடத்துக்கு வந்துடுவாரு.
அதனால இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. அவரும் ஆல்ரவுண்டர் தான். இந்தப் படத்துக்காகப் பல படங்களையும் இழந்துருக்காரு. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு சேலஞ்சிங் சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு வந்துடுவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிம்புவைப் பொருத்த வரை சிறு வயதுல இருந்தே சினிமாவில் இருந்து வருகிறார். அதனால் அவருக்கு சினிமாவைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரியும். அதிலும் கமல், மணிரத்னம் என பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்துள்ளதால் இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வார்.
இதையும் படிங்க… லேடிஸ் மேட்டரால் அஜித்தை விடாமல் துரத்தும் மக்கள்! இயக்குனர் பார்த்த வேலை.. எங்க வந்து நிக்குது பாருங்க
இவருக்கு என்று எப்போதும் ஒரு இடம் சினிமா உலகில் இருக்கத் தான் செய்கிறது. அந்த இடம் இந்தப் படத்திற்குப் பிறகு இன்னும் உயர்ந்த நிலையை எட்டும் என்பதே சினிமா ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.