உலகநாயகன் கமல் படம் ரிலீஸ் என்றாலே ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பும். அதுவே படத்தின் மீதான கூடுதல் எதிர்பார்ப்பையும் நல்ல ஒரு விளம்பரத்தையும் உண்டாக்கி விடும். அது போலத் தான் இப்போதும் நடந்துள்ளது.
கல்கி படத்தை வெளியிடக்கூடாதுன்னு பெரிய சதி நடந்ததாம். அதை அந்தப் படத் தயாரிப்பாளர் மனம் நொந்து போய் சொன்னார். இந்தப் படத்தை நான் 600 கோடிக்கு மேல் செலவழித்து எடுத்துள்ளேன். இந்தப் படத்தை ஆந்திராவில் வெளியிட விட மாட்டேன்னு எங்கிட்ட சவால் விட்டு சொன்னார். அப்படி சொன்னது ஒரு முதலமைச்சர்.
ஆனா நான் கண்டிப்பா ஆந்திராவில் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுவேன்னு சவால் விட்டேன். கடைசில அது எனக்கு சாதகமா அமைஞ்சிடுச்சி. அந்த முதலமைச்சரை இப்போ காணோம். அது யாருன்னு இப்போ உங்களுக்குத் தெரியும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. அவரு தான் வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பாளருக்கு இப்படி சொன்னார்.
ஆட்சி மாறிடுச்சு. இப்போ என்டிஆரின் மருமகன் சந்திரபாபு நாயுடு ஆட்சி வரப்போகுது. ஆந்திரா சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றியால் வரும் ஜூன் 9ல் ஆட்சி அமைக்க உள்ளார்.
இவருக்கு கல்கி படத்தோட விஷயம் தெரியும். அதனால இந்தப் படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும். ஜெகன்மோகன்ரெட்டியின் கட்சியில் தான் நடிகை ரோஜாவும் இருந்தார். அவரும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்கி படத்தில் கமல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிரபாஸ் இந்தப் படத்தின் ஹீரோ. அமிதாப்பச்சனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்தை விட கல்கி படம் அதிகமான ஏரியாக்களில் சேல்ஸ் ஆகி உள்ளதாம்.
மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் தேவமணி தெரிவித்துள்ளார்.
கல்கி 2898 AD படம் பிரம்மாண்டமாக பான் இண்டியா மூவியாகத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ்சுக்காக மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறது. இந்த மாதமே இந்தப் படம் வரும் 27.6.2024ல் திரைக்கு வருகிறது. மிகவும் மாறுபட்ட ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தில் உலகநாயகன் கமலின் கேரக்டர் ரொம்பவே வித்தியாசமாக இருக்குமாம். கலி என்று சொல்லப்படுகிறது.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…