More
Categories: Cinema News latest news

KH234: நாயகன் இரண்டாம் பாகமா தக் லைஃப்? யாகுசாவாக மிரட்டும் கமலுக்கு அடுத்த மைல்கல்லா?..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் KH234க்கு டைட்டில் வச்சிட்டாங்க. படத்தோட பெயருக்காக வெளியான வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சாக்கு போர்த்திய தலை. ஐந்தாறு பேர் ஓடி வருகிறார்கள். கமலின் கர்ஜனை தொடங்குகிறது. ரங்கராய சக்திவேல் நாயக்கன். காயல்பட்டணம் காரன். பொறக்கும்போதே என் தலைல எழுதி வச்சிட்டாங்க. சக்திவேல் நாயகர் கிரிமினல்னு. யாகுசா. அப்படின்னா ஜப்பான் மொழில கேங்ஸ்டர்னு சொன்னாவ.

Advertising
Advertising

போர்க்களத்தில் சங்கு ஊதி போர் தொடங்குகிறது. அங்கு கமல் ஏழாம் அறிவு சூர்யா போன்ற கெட்டப்புடன் குங்ஃபூ வித்தைகளைக் காட்டி அடியாட்களைத் தெறிக்க விடுகிறார்.

Thug life2

காளை என்னைத் தேடி வந்தது இது முதல் முறையல்ல. கடைசி முறையும் இல்ல. கவுட்டைக் கம்பு போன்ற ஒரு தடியை எடுத்து அடியாட்களைத் துவம்சம் செய்கிறார் கமல். நீண்ட தலைமுடியுடன் பார்ப்பதற்கே பெரிய கேங்ஸ்டர் போல கம்பீரமாக இருக்கிறார்.

தொடர்ந்து கத்திச்சண்டையிலும் புகுந்து விளையாடுகிறார். என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கர். ஞாபகம் வச்சிக்கோங்க.

அப்படின்னு டைட்டில் அறிவிப்பு வீடியோ முடிகிறது. படத்தின் பெயர் தக் லைஃப். படத்தைப் பார்க்கும்போது நாயகன் படத்தில் வரும் சக்திவேல் நாயக்கர் என்ற கமலின் கதாபாத்திரப் பெயரும் இந்தப்படத்தில் இணைந்து வருவதால் அதோட தொடர்ச்சியாக இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் படத்தில் டானாக வருவார்.

இதில் கேங்ஸ்டராக வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகன் படத்தைத் தூத்துக்குடியில் எடுத்திருப்பார்கள். இந்தப் படத்திலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் காரன்னு கமல் சொல்கிறார்.

ஏஆர் ரகுமான் இசை மிரட்டுகிறது. மணிரத்னத்தின் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று யூடியூபில் வெளியான சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
sankaran v

Recent Posts