‘லியோ’ படத்தில் நடிக்க போகிறாரா?.. ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த அண்ணாச்சியின் ட்விட்டர் பதிவு!..
நடிகர் விஜயின் நடிப்பில் காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா மற்றும் பல நடிகர்கள் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். காஷ்மீரில் குளிர் அதிகமாக இருப்பதால் எவ்ளோ சீக்கிரம் படப்பிடிப்பை நடத்த முடியுமோ அவ்ளோ சீக்கிரம் படப்பிடிப்பை துரிதப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். மேலும் படத்தின் முதல் செட்யூல் சென்னையில் முடிந்த அடுத்த கட்ட செட்யூல் காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
படத்தில் மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத் போன்ற பல முன்னனி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படம் ஒரு வேளை லோகேஷின் யுனிவெர்ஸிற்குள் வருமா என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்த நிலையில் தொழிலதிபரும் நடிகருமான சரவணன் அண்ணாச்சி திடீரென காஷ்மீர் பயணம் மேற்கொண்டார். காஷ்மீர் சென்ற அவர் அவ்வப்போது காஷ்மீரில் தான் செல்லும் இடங்களில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
அப்பவே சில நெட்டிசன்கள் ஒரு வேளை லியோ படத்திற்கும் இவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற பல சந்தேகங்களை எழுப்பி வந்தன்ர். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக திடீரென அண்ணாச்சி ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இன்னும் சில தினங்களில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பு வெளியாகும் என்ற தொணியில் பதிவிட்டுள்ளார்.
அதை பார்த்த ரசிகர்கள் காஷ்மீரில் இருக்கும் அண்ணாச்சி இப்படி ஒரு பதிவை போட்டிருப்பது லியோ படத்தில் நடிக்க போகிறாரோ என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க : பாரதிராஜா நிராகரித்த உதவி இயக்குனர்… பின்னாளில் இயக்குனர் இமயமே அசந்துப்போன நடிகர்… யார்ன்னு தெரியுமா?