என்னது பிக்பாஸ் மாயா கமலுக்கு உறவினரா? இதுனாலதான் அம்மணி எஸ்கேப் ஆகிட்டே இருக்காரா?

Published on: December 13, 2023
maya
---Advertisement---

Maya: விஜய் டிவியில் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் ரசிகர்களிடம் எரிச்சலை சம்பாதித்துக் கொண்டு வருகிறது இந்த பிக்பாஸ் ஏழாவது சீசன். மாறி மாறி பேசிக் கொண்டு ரசிகர்களையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு கட்டத்திற்கு  பிறகு மார்கெட்டாகவே காட்சியளிக்கிறது பிக்பாஸ். ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை பார்த்தாலே கூட கொஞ்சம் மன உளைச்சல்தான் வருகிறது என்றளவுக்கு சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: விசுவுக்கு ஏவிஎம் நிறுவனம் கொடுத்த மிகப்பெரிய கௌரவம்!.. மனுஷன் வாழ்நாள் முழுக்க மறக்கலயாம்!..

தெரிந்து விளையாடுகிறார்களா? இல்லை தெரியாமல் விளையாடுகிறார்களா? என தெரியவில்லை. ஏராளமான கெட்ட வார்த்தைகளை உள்ளே இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் கமல் குறிப்பிட்ட சில பெயரை மட்டும் சொல்லும் போது அது மேலும் கடுப்பை ஏற்படுத்துகின்றது. அதுவும் சமீபகாலமாக மாயாவை எந்தவொரு விமர்சனமும் செய்யாமல் இருக்கிறார் கமல். இது குறித்து கமல் – மாயாவை இணைத்து பல ட்ரோல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: ரஜினி பட இயக்குனரை அழவைத்த பாலச்சந்தர்!.. ஆனாலும் இவ்வளவு கோபம் வரக்கூடாது!..

அதுமட்டுமில்லாமல் கமல் பேச்சை மதிக்காதவராய் சிரித்தே மலுப்புவதாகவும் மாயா தெரிகிறார். இதனால் ரசிகர்கள் ஒரு வேளை மாயா கமலுக்கு உறவினராக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பினர். இதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் மாயா கமலுக்கு உறவினர் இல்லை என்றும் அப்படியே உறவினராக இருந்தாலும் மாயாவை ஆதரித்து கமல் ஒருபோதும் பேசமாட்டார் என்றும் அவருடைய மனோபாவம் எனக்கு தெரியும் என்றும் சித்ரா லட்சுமணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.