சண்ட சண்டதான்!..தளபதி-67ல் இருந்து வெளியேறும் பிரச்சினைக்குரிய நடிகர்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இவருடன் சேர்ந்து சரத்குமார், பிரபு, குஷ்பு, பிரகாஷ் ராஜ் உட்பட பல பிரபலங்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய தளபதி - 67 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான வேலைகளில் லோகேஷ் முழு வீச்சுடன் இறங்கியிருக்கிறார்.
கதைக்கான நடிகர்களை தேர்வு செய்யும் நிலையில் இருக்கும் லோகேஷ் மலையாள நடிகர் பிரித்விராஜ், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், நிவின் பாலி ஆகியோரை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்ற தகவல் வந்த நிலையில் நடிகர் மிஷ்கினும் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பல நாள்களாக கசிந்து வந்தது.
ஆனால் சில தினங்களாக நடிகர் விஷால் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது. இதனால் ஏற்கெனவே கமிட் ஆகியிருந்தமிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே பல பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருக்க ஒரு வேளை விஷால் இந்த படத்திற்குள் வந்ததனால் மிஷ்கின் விலக போவதாக சொல்லியிருப்பார் என்று சில தகவல்கள் கசிந்து வருகிறது.