திருமணமான நடிகருடன் காதலா?.. நெருக்கம் காட்டிய கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்..

by Rohini |   ( Updated:2023-04-08 07:20:10  )
keerthy
X

keerthy suresh

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் ஒரு மரியாதையான முன்னனி நடிகையாகவே வலம் வருகிறார்.

இவ்ளோ சின்ன வயதில் சாவித்ரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து சாவித்ரியாகவே வாழ்ந்திருப்பார் ‘மகாநடி’ படத்தில். இந்தப் படத்தில் அவரின் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் தேசியவிருது. இந்தப் படத்தில் சாவித்ரிக்கு பிறகு இன்றைய தலைமுறை நடிகைகளில் நடிகையர் திலகம் என்று சொல்வதற்கு சரியான நடிகையாக கீர்த்தி சுரேஷ் திகழ்கிறார்.

தான் நடிக்கும் எந்த ஒரு படத்திலும் தன் நடிப்பை வெளிப்படுத்துவதில் கீர்த்தி சுரேஷ் ஒரு அற்புதமான நடிகையாக விளங்கி வருகிறார். தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் நானியுடன் தசரா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் படப்பிடிப்பு சமயத்தில் கீர்த்தி சுரேஷ் , நானி சம்பந்தப்பட்ட பல புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

ஒரு பக்கம் நானி கீர்த்தி சுரேஷ் மீது காதலில் விழுந்துள்ளார் என்று கூறிவருகிறார்கள். இதைப் பற்றி கீர்த்தி சுரேஷுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் எந்த ஒரு பதிலும் நானிக்கு கீர்த்தி தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு தலைக்காதலாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

keerthy4

ஆனால் சினிமாவில் சொல்லும்படியாக வெற்றியை நானி பதிவு செய்யவில்லை என்றாலும் ஒரு குடும்பத்தலைவனாக அவரது சொந்தவாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். அழகான மனைவி மற்றும் ஒரு மகனுடன் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு போகும் நானி எப்படி கீர்த்தியின் மீது காதலில் விழுவார் என்றும் கூறிவருகிறார்கள். ஆனால் இதைப் பற்றி செய்திதான் இப்போது மிகவும் வைரலாகிக் கொண்டு வருகிறது.

இதையும் படிங்க :நாத்திகனாக இருந்த சுருளிராஜனை ஆத்திகன் ஆக்கிய வியப்பான சம்பவம்… என்னப்பா சொல்றீங்க?

Next Story