சங்கருக்கும் ரஜினிக்கும் அப்படி என்னதான் பிரச்சினை!.. ‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சம்பவம்...
பிரம்மாண்டத்திற்கு பேர் போன இயக்குனர் சங்கர். இவர் படம் என்றாலே பல கோடிகளில் தான் புரளும். வசூலிற்கு பஞ்சமிருக்காது. சங்கரின் திரைப்பயணத்தை புரட்டிப் பார்த்தாலே அது புரியும். ஒரு பாடலுக்கே கோடிக்கணக்கில் செலவு செய்யும் அசாத்திய மனிதர் சங்கர்.
ஜெண்டில்மேன், முதல்வன், நண்பன், சிவாஜி, எந்திரன், 2.0, இந்தியன் போன்ற படங்கள் எந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இப்பொழுது இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் சங்கர். தொடர்ந்து மூன்று முறை ரஜினியுடன் கூட்டணி அமைத்த சங்கர் ‘சிவாஜி’ படத்தின் மூலம் தான் ரஜினியுடன் இணைகிறார்.
2007ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுத்து 157 கோடி வரை வசூலில் சாதனை படைத்த படம். படத்திற்கு இசை ஏஆர்.ரகுமான். இந்த படத்தை தயாரித்து வெளியிட்டது ஏவிஎம் நிறுவனம். சிவாஜி படம் வெளிவருவதற்கு முன் ஒரு சமயம் ஏவிஎம் சரவணனிடம் ரஜினி ஒரு பெரிய படம் பண்ணவேண்டும் என்று கூறினாராம்.
அப்போது சரவணனின் மகனும் தயாரிப்பாளருமான குகன் பெரிய படம் என்றாலே அது சங்கர் தான் என்று கூற அதற்கு ரஜினி சங்கரா அதெல்லாம் சரிவராது, சங்கர் பண்ணமாட்டார் என்று கூறியிருக்கிறார். உடனே சரவணன் உங்களுக்கு ஓகேவா சொல்லுங்கள், நான் போய் பேசுகிறேன் என்று சொல்ல ரஜினியும் அவர் சம்மதிக்கமாட்டார், இருந்தாலும் உங்கள் விருப்பத்திற்காக போய் பேசிப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க : காலங்காலமாக எம்ஜிஆர் கடைபிடித்து வந்த பழக்கம்!.. நிமிடத்தில் தகர்ந்தெறிந்த சரோஜாதேவி..
உடனே சங்கர் வீட்டிற்கு சென்று சரவணன் குகன் இருவரும் கேட்க அதற்கு சங்கர் முதலில் என் படத்தில் நடிக்க ரஜினிக்கும் இஷ்டமா? என்று கேட்டு சொல்லுங்கள் என்று சொன்னாராம். அவர் சம்மதம் தெரிவித்ததனால் தான் உங்களிடம் வந்திருக்கிறோம் என்று இவர்கள் கூற ஒருவழியாக சங்கரும் சரி என்று சொல்லிவிட்டாராம். அதன் பின் ரஜினி சரவணனுக்கு போன் செய்து நானும் சங்கரும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம் , முடிந்தால் நீங்களும் வாருங்கள் என்று சொல்ல அதிலிருந்து தான் சிவாஜியின் கதை ஆரம்பமாகியிருக்கிறது.
இந்த பிரச்சினைக்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் தெரியாவிட்டாலும் வைரமுத்துவிடம் சங்கர் ஒரு சமயம் என் வீட்டிற்கு வந்து ரஜினியே படம் பண்ணுவோம் என்று கேட்டாலும் நான் பண்ணமாட்டேன் என்று சொல்லியிருக்கிறாராம். இந்த விஷயம் வைரமுத்து மூலமாக ஏவிஎம் சரவணனுக்கு தெரியவந்திருக்கிறது. ஆனால் ஏன் அப்படி சொன்னார்? இருவருக்கும் இடையில் அப்படி என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதை ஒரு பேட்டியில் ஏவிஎம் சரவணன் கூறினார்.