Cinema History
கமலின் சூரசம்ஹாரம் படத்தில் முதல்ல ஹீரோயினா நடிக்க இருந்தவர் அவரா?அப்பாடா…. தப்பிச்சிட்டாரே!
பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணனின் சொந்தப் படம் சூரசம்ஹாரம். கமல், நிரோஷா, நிழல்கள் ரவி, பல்லவி, மாதுரி, கிட்டி, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். 1988ல் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லை.
Also read: கங்குவாவ எப்படியாச்சும் காப்பாத்து சாமி!.. சிறுத்தை சிவாவுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா!…
ஆடும் நேரம் இதுதான், நான் என்பது நீ அல்லவோ, நீல குயிலே, வேதாளம் வந்திருக்குது ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நிரோஷா தான் கதாநாயகி. ஆனால் முதலில் கதாநாயகியாக நடிக்க பானுப்பிரியாவைத் தான் கேட்டார்களாம். இதுகுறித்து படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
பானுப்பிரியா
பானுப்பிரியா கேமரா முன்னாடி பயங்கரமா ஒர்க் பண்ணுவாங்க. ஆனா கேமராவ ஆப் பண்ணதுக்கு அப்புறம் யார் கூடவும் பேசமாட்டாங்க. நம்பிக்கை சுத்தமா இல்லாத மாதிரி பயந்தாற்போல தான் இருப்பாங்க.
இதை நீங்க எப்பவாவது கவனிச்சீங்களான்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் அவரது லென்ஸ் நிகழ்ச்சியில் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
மிகச்சிறந்த நடிகை
அதுதானே நடிப்பு. நீங்க என்னவா இருக்கீங்களோ அதையே திரையில பிரதிபலிச்சா அது எப்படி நடிப்பாகும்? பானுப்பிரியாவைப் பொருத்த வரைக்கும் அவங்க மிகச்சிறந்த நடிகை. அவங்களோட ஆரம்ப காலகட்டத்துல இருந்தே அவங்களை எனக்கு மிக நல்லா தெரியும்.
சூரசம்ஹாரம்
என்னுடைய சூரசம்ஹாரம் திரைப்படத்தில் கூட கமல்ஹாசனுக்கு ஜோடியாக நான் பானுப்பிரியாவை நடிக்க வைக்கிறதுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனா அந்தக் காலகட்டத்துல அவரோட கால்ஷீட் இல்லாததால என்னால நடிக்க வைக்க முடியலை. பானுப்பிரியாவைப் பத்தி நீங்க சொன்ன விஷயம் எல்லாமே உண்மை தான். அவருடைய திறமைக்கேற்ற உயரத்தைத் தொடவில்லை என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நான் என்பது நீயல்லவோ
Also read: AR Rahman: மனைவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட 3 கண்டிஷன்கள்!.. லீக் ஆன தகவல்!…
சூரசம்ஹாரம் படத்தைப் பொருத்தவரை கமலும், நிரோஷாவும் பாடல் காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்து இருப்பார்கள். குறிப்பாக ‘நான் என்பது நீயல்லவோ’ பாடலைப் பார்த்தால் தெரியும். அவ்வளவு கவர்ச்சியாக இருக்கும். படுக்கை அறை காட்சி, இதழ் முத்தம், அருவி குளியல் என கவர்ச்சி விருந்தே நடந்து இருக்கும்.
முத்தப் புரட்சி
கமல் இதழ் முத்தப் புரட்சி செய்வதில் வித்தகர். அந்த வகையில் நிரோஷாவையே கதிகலங்கச் செய்து விட்டார். ஒருவேளை பானுப்பிரியா நடித்து இருந்தால் கமல் சும்மா விடுவாரா என்றெல்லாம் ரசிகர்கள் பொளந்து கட்டி விடுவார்கள் என்றே சொல்லலாம்.