எல்லாத்தையும் உடைச்சி உண்மையை ரசிகர்களுக்கு சொல்லிடுங்க சிம்பு.!

simbu-nithi agarwal
நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை கவனமாகவும், பலமாகவும் பதித்து வருகிறார். இதில் அவர் நடிப்பில் அடுத்ததாக, வெந்து தணிந்தது காடு தயாராகி வருகிறது. இதனை அடுத்து பெண்டிங்கில் இருக்கும் பத்து தல ஷூட்டிங்கிற்கு செல்ல உள்ளாராம்.
அதனை அடுத்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு பிறகு நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார். இதில் ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டது இயக்குனர் மிஷ்கின் மற்றும் ராம் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்க உள்ளது என்கிற தகவல் வெளியானது தான்.
இதையும் படியுங்கள் - தனுஷ் இருக்கும் இடம் தேடி அலைந்தது தான் மிச்சம்…விரக்தியில் படக்குழு.!
இதில், மிஷ்கின் அந்த தகவலை ஏறக்குறைய உறுதிப்படுத்தினார். ஆனால், ராம் கதை சொன்ன விவகாரம் குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
இது குறித்து விசாரிக்கையில், இயக்குனர் ராம், சிம்புவுக்கு கதை கூறி வருடங்கள் ஓடிவிட்டன. தற்போது எந்த சந்திப்பும் நிகழவில்லை. ஒருவேளை அது உண்மை என்றால், சிம்பு தான் இதனை உறுதிப்படுத்த வேண்டும்.