இந்த தடவை தட்டி தூக்கிரனும்!..சிம்புவுடன் ஜோடி சேர போகும் அந்த இளம் நடிகை!..கண்ணு பத்திரமா இரும்மா!..
தமிழ் சினிமாவில் கடும் போராட்டத்திற்கு பிறகு ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் சிம்பு. இவரின் சில குணாதிசயங்களாலேயே பல படங்களின் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டது.
அதன் பின் மாநாடு படம் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு சிம்பு சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் அந்த படம் 2023ஆம் ஆண்டு இறுதியில் தான் நடைபெறும் என்று தெரிகிறது.ஏனெனில் சுதா கொங்காரா ஹிந்தியில் சூரரை போற்று படத்தின் ரீமேக் வேலைகளில் இருக்கிறார்.
அதை முடித்து சூர்யாவுடன் இணைய இருக்கிறார். அதன் பின் தான் ஒரு பெரிய பட்ஜெட் படமாக பேன் இந்தியா படமாக சிம்புவை வைத்து எடுப்பதாக முடிவில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று தெரிகிறது.
ஏற்கெனவே மாநாடு படத்தில் கீர்த்தி இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரால் நடிக்க முடியவில்லை.ஆனால் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவார்கள் சிம்புவும் கீர்த்தியும் என்று தெரிகிறது. இதன் அதிகாரப்பூர்வ தகவல் தீபாவளி ஒட்டி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.