திருமணத்தில் இணைவார்களா?..சிம்பு - திரிஷா பண்ண காரியத்தால் அவர்களுக்கே வந்த வினை!..
தமிழ் சினிமாவில் ஒரு கம் பேக் அப்புறம் மாஸாக வந்து கெத்து காட்டுபவர்கள் நடிகர் சிம்பு மற்றும் நடிகை திரிஷா. முதன் முதலில் இவர்கள் இணைந்து நடித்த படம் அலை திரைப்படம். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சேர்ந்து நடித்தனர்.
அந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி அனைவரையும் ரசிக்கும் படியாக இருந்தது. மேலும் கார்த்திக் ஜெஸ்ஸியாகவே மக்கள் மனதில் வாழ்ந்தார்கள். அதன் பின் மீண்டும் இருவரையும் வைத்து கெளதம் மேனன் ஒரு குறும்படத்தை கொரானா காலத்தில் எடுத்தார்.
இதையும் படிங்க : நாடகம் பார்க்க வந்த பெரியார்… கீழே உட்காரச் சொன்ன எம்.ஆர்.ராதா…ஆனால் நடந்ததோ ஆச்சரியம்!!
இப்படி இவர்களுக்குள் இருக்கும் ஒரு ரொமான்ஸ் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பார்த்து அசந்து போன ரசிகர்கள் இவர்கள் இருவரும் மாறி மாறி திருமணத்தை பற்றி போடும் டிவிட்-களாலும் ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளனர்.சிம்பு ஒருபக்கம் திருமணம் செய்துகொண்டு பிரிந்து வாழ்வதை விட தனியாக சந்தோஷமாக இருப்பதே மேல் என்று கூற
மறுபக்கம் திரிஷா ‘திருமணம் செய்து பின் விவாகரத்து பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று கூறிவருகிறார். ஆகவே திருமணத்தை பற்றி சிம்பு மற்றும் திரிஷாவின் கருத்துக்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் ரசிகர்கள் பேசாமல் நீங்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளுங்களேன் என்று தங்களது அறிவுரைகளை கூறிவருகிறார்கள்.