அந்த சீன்ல இருந்தது சிவகார்த்திகேயன்தான்! என்னப்பா சொல்றீங்க? ‘ஜெய்லர்’ பட முடிச்சை அவிழ்த்த பிரபலம்

by Rohini |
siva
X

siva

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ஆறு நாட்களைக் கடந்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஆறு நாட்களில் 400 கோடி வசூலை பெற்றுள்ளது. இது கமலின் விக்ரம் படத்தின் வசூலை மிஞ்சி சாதனை படைத்திருக்கிறது.

கோடம்பாக்கத்தில் கூறுவது போல இன்னும் இரண்டு வாரத்தில் ஆயிரம் கோடி வசூலை தட்டிச்செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு ஃபேன் இந்தியா படமாக ஜெயிலர் திரைப்படம் எல்லா மொழிகளிலும் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதையும் படிங்க: ரஜினி மேல எனக்கு இதுதான் கோபம்!.. அந்த நடிகர பார்த்து கத்துக்கணும்.. பொங்கிய மன்சூர் அலிகான்..

தெலுங்கில் எந்த ஒரு ப்ரோமோஷனும் இல்லாத போது கூட இன்று வரை ஹவுஸ் ஃபுல் ஷோவாக ஜெய்லர் திரைப்படம் மிரட்டி வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சில தகவல்கள் பரவியது. அதாவது ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் படத்தில் வசந்த் ரவி ரஜினியின் மகனாக நடித்திருந்தார். ஜெயிலர் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியான போது கூட ரஜினி சிவகார்த்திகேயன் இருக்கும் ஒரு புகைப்படம் அந்த வீட்டு சுவரில் இருப்பதை ஃப்ரீஸ் செய்து ரசிகர்கள் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என இணையத்தில் வைரல் ஆக்கினர்.

ஆனால் உண்மையில் அது என்ன புகைப்படம் என்பதை ஜெயிலர் படத்தின் ஆர்ட் டைரக்டர் ஆன கிரண் ஒரு பேட்டியில் கூறினார். அதாவது படத்தின் கதைப்படி ரஜினியும் அவரது மகனும் இருக்கும் மாதிரியான புகைப்படம் தேவைப்பட்டதாம். ஆனால் ரஜினியையும் வசந்த் ரவியையும் வைத்து அந்த மாதிரி ஒரு போட்டோ ஷூட் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாம்.

இதையும் படிங்க : கடந்த 3 வருடங்களாக தியேட்டர்களை வாழ வைத்த 3 நடிகர்கள்.. 3 படங்கள்!…

இது வழக்கமாக எல்லா படங்களிலும் நடக்கக் கூடியதாம். போட்டோ ஷூட் எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும் போது இணையத்தில் அந்த நடிகர்களின் புகைப்படங்களை டவுன்லோட் செய்து எடிட் செய்வார்களாம். அப்படித்தான் வசந்த் ரவியின் உடலமைப்பும் சிவகார்த்திகேயனின் உடலமைப்பும் ஒன்றுபோல் இருந்ததால் சிவகார்த்திகேயனின் புகைப்படத்தை டவுன்லோட் செய்து ரஜினியுடன் இணைத்து வசந்த ரவியின் முகத்தை மட்டும் இந்த புகைப்படத்தில் எடிட் செய்து வைத்தார்களாம்.

ஆனால் ரஜினியையும் தாண்டி படத்திற்குப் பின்னால் இருக்கும் இந்த டெக்னிக்கை மக்கள் அந்த அளவுக்கு ரசித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு மிக பிரமிப்பாக இருக்கிறது என கிரண் கூறினார்.

Next Story