ஏத்தி விட்ட ஏணியை மறந்து போனாரா சூர்யா?.. ஹிட் கொடுத்த இயக்குனர்களை தவிர்ப்பது ஏன்?..
கலைக்குடும்பத்தில் இருந்து வந்தாலும் சூர்யாவிற்கு சினிமா என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. அவரது தந்தையான சிவக்குமார் சிவாஜி காலத்தில் இருந்து நடித்து வரும் ஒரு பிரபல நடிகர். இருந்தாலும் சிவக்குமாரின் மகன் என்பதற்காக ஈஸியாக அவரால் முன்னேற முடியவில்லை.
நடித்த படங்கள் எல்லாம் ஆரம்பகாலங்களில் தொடர் தோல்வியையே தழுவியது. நடிக்க வரவில்லை, டான்ஸ் ஆட வரவில்லை என்ற பல குறைகள் இருந்தன. இருந்தாலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருந்தார் சூர்யா. 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நேருக்கு நேர் திரைப்படம் தான் சூர்யா அறிமுகமான முதல் படம்.
அதன் பிறகு பிரண்ட்ஸ் திரைப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்தார். தன் நடிப்பை இன்னும் மெருகேற்றிக் கொள்ள இயக்குனர் பாலாவுடன் களத்தில் இறங்கினார். நந்தா திரைப்படம் அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டது. அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருதை பெற்றார் சூர்யா.
பின் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரொமாண்டிக், க்ளாசிக் போலிஸாக நடித்த படம் தான் ‘காக்க காக்க’. அந்தப் படத்திற்கு பிறகு தான் சூர்யாவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் குவிந்தனர். அந்த அளவுக்கு தன் ரொமாண்டிக் பார்வையால் ரசிகர்களை கவர்ந்திருப்பார். அதன் பின் சென்னை தர லோக்கல் பேசி சென்னை இளைஞனாக ஆறு படத்தில் ஹரி சூர்யாவை மாற்றியிருப்பார்.
இப்படி சூர்யாவின் கெரியரில் கவுதம், ஹரி, பாலா என மூவரும் ஒரு ஏற்றி விட்ட ஏணிகளாக இருந்துள்ளனர். ஆனால் ஒரு காலகட்டத்தில் இவர்கள் மூவரையும் புறம் தள்ளியிருக்கிறார் சூர்யா. காரணம் அறிய பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் ரசிகர்கள் கேட்க, ஒரு படத்திற்காக சூர்யாவும் கௌதமும் மீண்டும் இணைகையில் கௌதம் அந்த படத்திற்கான முழு கதையையும் திரைக்கதையையும் உருவாக்கி தரவில்லையாம். அதனாலேயே சூர்யா அந்தப் படத்தில் நடிக்கவில்லையாம்.
ஹரி விஷயத்தில் அவர் உருவாக்கிய கதையில் பிற்பகுதி கதை சூர்யாவிற்கு ஏற்புடையதாக இல்லையாம். அதன் காரணமாகத்தான் ஹரி படத்திலும் சூர்யா நடிக்கவில்லையாம். அதன் பின் பாலா விஷயம் அனைவரும் அறிந்த ஒன்று. சூர்யா இப்போது எப்பேற்பட்ட நடிகர் , ஒரு வளர்ந்து விட்ட நடிகர் என்று பாலா எண்ணவில்லை போலும். அதை மனதில் வைத்துக் கொண்டு படப்பிடிப்பை நடத்தியிருந்தால் அவர்கள் கூட்டணியில் உருவாக இருந்த படம் இன்றைக்கு முடிந்து வெளியாகியிருக்கும் என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க : பொதுவெளியில் வியாக்கானம்!.. இதெல்லாம் பாக்கமாட்டாரா வெற்றிமாறன்?..