நீங்க வேண்டாம் அவங்கள களமிறக்குங்க.! தியேட்டர் ஓனர்களின் ஒரே சாய்ஸ்.!?

by Manikandan |
நீங்க வேண்டாம் அவங்கள களமிறக்குங்க.! தியேட்டர் ஓனர்களின் ஒரே சாய்ஸ்.!?
X

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யா ஒரு கிராமத்தான் உடல் அமைப்பை போல் சூர்யா தோன்றுகிறார். இப்படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும். அடுத்ததாக, அஜித் குமார் நடிப்பில் H.வினோத் இயக்கி உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த மூவர் கூட்டணியில் தயாராகும் இரண்டாவது திரைப்படம் வலிமை. இப்படத்தின் படக்குழு பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4 என இரு தேதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தியேட்டரை காப்பாற்ற போவது சூர்யாவின் எதற்கும் துணிந்தவனா அல்லது அஜித்குமாரின் வலிமை திரைப்படமா என ரசிகர்களை போல தியேட்டர் உரிமையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த இரண்டு திரைப்படமும் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் வெளியிட முடிவு எடுத்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில், அஜித்தின் வலிமை திரைப்படம் ஜனவரி 13 ரிலீஸ் என கூறி, தள்ளிவைக்கப்பட்ட திரைப்படம். அடுத்ததாக, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்த்தது. கொரோனா மூன்றாவது அலைக்கு பிறகு வலிமை திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்புள்ள திரைப்படம் வெளியானால் மீண்டும் பொதுமக்கள் தியேட்டர் நோக்கி வருவார்கள் என எதிர்ப்பார்த்தனர்.

surya etharkkum thuninthavan

அதேபோல், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் நல்ல எதிர்பார்ப்புடன் இருக்கிறது ஆனால், இது குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளதால் அதற்கு குடும்பங்கள் தியேட்டருக்கு வருவது வழக்கம்.

இதையும் படியுங்களேன்- தனுஷால் ரஜினி பட வாய்ப்பை இழந்த இயக்குனர்.. வட போச்சே!…

ஆனால் தியேட்டர் ஓனர்கள் மத்தியில் வலிமை திரைப்படத்தை வெளியிட விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம். இதனால், என்ன நடக்க போவதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story