துபாயில ஷூட்டிங் வச்சது அதுக்கும் சேர்த்துதானாம்!.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடித்த அஜித்!..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். ஒரு பெரிய ரசிகர் படைபலத்துடன் தமிழ் சினிமா இண்டஸ்டிரியில் முக்கியமான அந்தஸ்தை பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றனர்.
கோலிவுட்டில் ஆச்சரியத்தக்க விஷயமே இதுதான். ரசிகர்களிடம் பேசுவதுமில்லை, நேரிடையாக வந்து சந்திப்பதுமில்லை. அப்படி இருக்க ஏன் இந்தளவுக்கு ரசிகர்கள் அஜித் மீது வெறித்தனமாக இருக்கிறார்கள் என்பது தான். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை பற்றிய அப்டேட்டும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க: என்ன பார்த்தா அந்த மாதிரியா தெரியுது!.. விஜய்க்கு ஜோடியாக நடிக்க முடியாதுன்னு ஜோதிகா சொல்ல இதுதான் காரணமா!..
இந்நேரம் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்க வேண்டியது. ஆனால் இடையில் நடந்த சில பல பிரச்சினைகள் காரணமாக இழுத்துக் கொண்டே போய்விட்டது. இதற்கிடையில் அஜித்தும் தனது பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
இப்போது எல்லாம் முடிந்து அக்டோபர் மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்கள். முழுக்க முழுக்க துபாயிலேயே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதை பற்றி வலைப்பேச்சு அந்தனன் கூறும் போது ஏற்கனவே துபாயில் அஜித்துக்கு ஒரு வீடு இருக்கிறதாம்.
இதையும் படிங்க : அரவிந்த்சாமி அப்பாக்கு ரஜினி கொடுத்த மரியாதை! வாயடைத்து நின்ற ‘மெட்டிஒலி’ சிதம்பரம்
அது போக சமீபத்தில் தான் அஜித் அங்கு ஒரு அலுவலகம் அமைத்திருக்கிறாராம். மேலும் சில ட்ரோன்களையும் வாங்கியிருக்கிறாராம். இதையெல்லாம் பார்க்கும் போது துபாயில் ஒரு பக்கம் ஷுட்டிங்கில் கலந்து கொண்டது மாதிரியும் ஆச்சு, இன்னொரு பக்கம் அஜித்தின் சொந்த விஷயங்களை பார்த்துக் கொண்டது மாதிரியும் ஆச்சு என கூறினார்.
ஏற்கனவே அஜித் பைக் விரும்பிகளுக்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதே போல் ட்ரோன்களை வைத்து வேறு எதாவது பிசினஸ் செய்யும் மன நிலையில் இருக்கிறாரோ என்று தெரியவில்லை. அதன் காரணமாகக் கூட துபாயில் ஒரு அலுவலகத்தை அமைத்திருக்கலாம் என அந்தனன் கூறினார்.