ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா என்ன?.. பழைய படி தன் லீலைகளை தொடரும் சிம்பு!..
பல இன்னல்களை தாண்டி இன்று தமிழ் சினிமாவே ஆச்சரியமாக பார்க்கும் நடிகர் யாரென்றால் அது சிம்பு தான். மாநாடு படம் அவருக்கு ஒரு கம்பேக்கை கொடுத்து இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
குழந்தை நட்சத்திரம்
என்னதான் தன் தந்தை ஒரு சகலகலா வல்லவனாக இருந்தாலும் தன் முயற்சியால் தான் எல்லாவற்றையும் பெறமுடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் சிம்பு. தந்தை டைரக்ஷனிலேயே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார் சிம்பு. உறவு காத்த கிளி,தாய் தங்கை பாசம்,சபாஷ் பாபு,என் தங்கை கல்யாணி,எங்க வீட்டு வேலன் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தான் யார் என்பதை அப்பவே நிரூபித்து காட்டியிருப்பார் சிம்பு.
குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் தன் உணர்ச்சி பெருக்கோடு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தன் வீட்டு குழந்தை போலவே மக்கள் சிம்புவை பார்க்க ஆரம்பித்தனர்.
ஹீரோ அறிமுகம்
தந்தையின் உதவியோடு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அதே தந்தை டைரக்ஷனில் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமாகிறார் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம். குழந்தையாக பார்த்த மக்கள் ஹீரோவாகவும் சிம்புவை மிக எளிதாக ஏற்று கொண்டனர்.
அதன் பின் தம், அலை, கோயில் போன்ற காதலை மையப்படுத்தி அமையும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததனால் ஏராளமான பெண் ரசிகைகள் இவரை சூழ்ந்து கொண்டனர். சிம்பு என்றால் காதல் தான் என்று சொல்லுமளவிற்கு எதார்த்தமாக காதலை வெளிப்படுத்து முறையில் அழகாக நடித்திருப்பார்.
சர்ச்சை
ஓரளவிற்கு கமெரிஷியல், காதல் போன்ற படங்களில் நடித்து வந்த சிம்புவிற்கு கொஞ்சம் கஷ்டகாலத்தை கொடுத்த படமாக வல்லவன், மன்மதன், போடா போடி போன்ற படங்கள் அமைந்தன. ஓரளவிற்கு படம் போனாலும் குடும்பத்தோடு பார்க்கிற படமாக அமையவில்லை.
அதிலிருந்து சிம்புவின் மேல் ஒரு முத்திரை குத்தப்பட்டது, சிம்பு என்றால் ஒரு ப்ளே பாய் தான் என்று. ஓவர் க்ளாமர், கவர்ச்சி போன்றவற்றை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்தினார்.
மீண்டெழுந்தார்
கொஞ்சம் பிரேக் எடுக்க 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் சிம்புவிற்கு ஒரு பிரேக் த்ரு தந்த படமாக அமைந்தது. அதன் பின் வெளியான அச்சம் என்பது மடமையடா, அஅஅ, வந்தால் ராஜாவாக தான் வருவேன், போன்றப் படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் சிம்புவின் மேல் உள்ள கரையை துடைக்கிற படமாக இவைகள் அமைந்தன.
அதன் பின் மாநாடு,வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் சிம்புவை ஒரு மாநடிகனாக மாற்றியது. அடுத்து வரவிருக்கும் பத்து தல திரைப்படம் மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மன்மதன் - 2
இந்த நிலையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அவர் ஏற்கெனவே நடித்த மன்மதன் படத்தின் இரண்டாம் பாகம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி 2024ல் திரைக்கு வரும் என பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அனைவரும் மீண்டும் முருங்கை மரம் ஏற போகிறாரா சிம்பு என புலம்பி வருகின்றனர்.