பிசியா நடிச்சிக்கிட்டு இருந்த பரத்!.. இவரு நிலமை இப்படி ஆகிப்போச்சே!...

Actor Bharath
சினிமாவில் படவாய்ப்பு கிடைக்காததால் வேறு வழியில்லாமல் கிடைத்த வேலையை செய்து கொண்டு பிழைப்பைத் தேடி வரும் நடிகர், நடிகைகள் பலர் உண்டு. இவர்களில் ஒரு சிலர் வெளியே தெரிவார்கள். நடிகர் அப்பாஸ் கூட வெளிநாட்டில் கார் டிரைவராக உள்ளார் என்று சொல்வார்கள்.
சினிமாவில் ஜெயிக்க திறமை மட்டும் இருந்தால் போதாது. அதிர்ஷ்டமும் வேண்டும் என்பது போல தான் பரத் விஷயத்திலும் நடந்துள்ளது. ஏற்கனவே நடிகர் அருண்குமார் இப்படித் தான் தனது ஒட்டுமொத்த திறமையை எல்லாம் கொட்டி படத்தில் நடித்தாலும் இன்னும் அவர் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

Kathal
அந்த வகையில் நடிகர் பரத்தும் சினிமா வாய்ப்பு இல்லாத நிலையில், தற்போது ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமான பரத். தற்போது முத்தையா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் வில்லனாகவும் நடிக்க உள்ளாராம். இவருக்கு மிகவும் திருப்புமுனையைக் கொடுத்த படம் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல்.
பட்டியல், வெயில் போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அப்படி இருந்தும் இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

Bharath
இந்நிலையில், பரத் ஆட்டோ ஓட்டுநராக உள்ள படம் ஒன்று இணையத்தில் வைரலானது. படவாய்ப்பு இல்லாத பரத் ஆட்டோ ஓட்டுகிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் இது பரத்தின் அடுத்த படமான 'ஒன்ஸ் அபான் ஏ டைம் மெட்ராஸ்' என்ற திரில்லர் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி.
முத்தையா தனது மகனை ஹீரோவாக்கி படம் இயக்குகிறார். இந்தப் படத்தில் தான் பரத் வில்லனாக நடிக்க உள்ளாராம். சினிமாவைப் பொறுத்த வரை வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் வரை தான் மார்க்கெட். ஒரு சின்ன கேப் விழுந்தாலும் அதை சரிசெய்ய பெரிய அளவில் போராட வேண்டும்.