கேமியோ ரோல் தேவையா? அது திணிக்கப்படுகிறதா? இதென்ன புது கலாச்சாரம்?
கோட், கூலி படத்துல எல்லாம் சில கேமியோ ரோல்கள் வந்துள்ளன. சர்ப்ரைஸ் ஆக்டர்களைக் கெடுக்குறா மாதிரி இருக்கான்னு கேட்டதுக்கு... பிரபலம் ஒருவர் இப்படி பதில் தெரிவித்துள்ளார்.
இன்னைக்கு உலக லெவல்ல சினிமா போய்க்கிட்டு இருக்கு. அப்படி இருக்கும்போது தமிழ் நடிகர் தெலுங்குல நடிக்கக்கூடாது. மலையாள நடிகர் கன்னடத்துல நடிக்கக்கூடாது. தெலுங்கு நடிகர்
தமிழ்ல நடிக்கக்கூடாதுன்னு எல்லாம் சொல்லக்கூடாது. கமல் கல்கி படத்துல நடிக்கலையா? எல்லாரு படத்திலும் எல்லாருமே நடிக்கிற அளவுக்கு காலங்கள் போய்க்கிட்டு இருக்கு. பகத் பாசில் எல்லா மொழிகளிலும் நடிச்சிக்கிட்டு இருக்காரு. மோகன்லால், மம்முட்டி, தமிழ்ப்படத்துல நடிச்சிக்கிட்டு இருக்காங்க.
மம்முட்டி தெலுங்குல நடிச்சிக்காங்க. இன்னைக்கு மீடியாக்கள் அதிகமானதும் ஆர்டிஸ்ட் எல்லா ஸ்டேட்லயும் அதிகமாகிட்டாங்க. எல்லா ஸ்டேட் நடிகரும் ஒரு படத்துல நடிக்கும்போது ஜனரஞ்சகமாக இருக்கும். அந்தப் படத்துக்குப் பெரிய பிளஸ்சா இருக்கும். நயன்தாரா ஜவான்ல நடிச்சிருக்காங்க.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல ஜீவா சார் கேமியோ. மதகஜராஜா என்ற விஷால் படத்தில் ஆர்யா கேமியோ ரோல். நல்லா பண்ணியிருப்பாரு. அது ஜாலியா இருக்கும். ரசிகர்களுக்கும் அப்படித்தான்.
மேற்கண்ட தகவலை பிரபல திரையரங்கு உரிமையாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் மாபெரும் வசூலை ஈட்டிய படம் விக்ரம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வந்து கலக்குவார். பகத் பாசிலும் தன்னோட பங்குக்கு அதிரடியைக் காட்டியிருப்பார்.
Also read: கோட் படத்தில் நடிக்க இருந்தது அந்த ஹீரோதான்.. அர்ச்சனா கல்பாத்தி சொன்ன சூப்பர் சேதி
படத்தின் கடைசிக்காட்சியில் சூர்யா கேமியோ ரோலில் வந்து கலக்குவார். ரோலக்ஸ் என்ற அந்த கதாபாத்திரம் வெறும் 5 நிமிடங்களே வந்தாலும் செம மாஸாக இருக்கும். சூர்யாவை இப்போது பார்த்தாலும் ரோலக்ஸ் என்று தான் அழைக்கிறார்கள்.
அது தான் விக்ரம் பார்ட் 2வின் லீடாகவே அமைந்துள்ளது. அந்த வகையில் கேமியோ ரோல்கள் தமிழ்சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன என்றே சொல்ல வேண்டும்.