வாடிவாசலை ட்ராப் செஞ்சிடலாமா? தயாரிப்பாளரிடம் கேட்ட வெற்றிமாறன்.. திடீரென கிளம்பிய புது ஐடியா…

Vaadivasal: சமீபகாலமாக கோலிவுட்டில் ஒரு படத்தின் சர்ச்சை தான் அதிகமாக இருக்கிறது. அது சூர்யா நடிப்பில் உருவாக இருந்த வாடிவாசல். அப்படத்தின் சமீபத்திய குழப்பதால் ரசிகர்களே கொஞ்சம் இல்லை நிறைய குழப்பத்தில் தான் இருக்கின்றனர்.

அமீருக்கும், சூர்யாவுக்கும் பருத்திவீரன் படத்தின் பண பிரச்சனையால் நீதிமன்றத்தில் சில வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது. இந்த விஷயம் திடீரென வைரலாக அனைத்து இயக்குனர்களும் அமீருக்கு சாதகமாக களமிறங்கினர் இதில் வெற்றிமாறனும் ஒருவர். ஒரு கட்டத்தில் இருதரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதை முன் நின்று வெற்றி மாறனே நடத்தியதாகவும் கூட சிலர் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வடிவேலு மன்னிப்பு கேட்கனும்! குற்ற உணர்வோடவே வாழ வேண்டியதுதான்.. நச்சுனு சொன்ன நடிகர்

கிட்டத்தட்ட தன்னுடைய முழு ஆதரவையும் அமெரிக்கா கொடுத்தார் வெற்றிமாறன் இதனால் அவர்கள் இணைய இருந்த வாடிவாசல் படத்தில் சூர்யா விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமீருடன் சூர்யா கண்டிப்பாக நடிப்பார் என்றே வெற்றிமாறன் தரப்பு சொல்லி வந்தனர். ஆனால் சூர்யா தற்போது பாலிவுட்டில் பிஸியாகி வருகிறார்.

அதற்கு ஏற்ப வெற்றிமாறனும் தன்னுடைய விடுதலை இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சூர்யாவால் வாடிவாசல் படத்தில் இணைய முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் கூட சூர்யாவுக்கு பதில் அக்கேரக்டரில் சூரி அல்லது தனுஷ் நடிக்கலாம் எனவும் சில தகவல்கள் கோலிவுட்டில் உலா வந்தது.

இதையும் படிங்க: கோட் திரைப்படத்தில் விஜயிற்கு வில்லனாகும் ’சூப்பர்ஸ்டார்’… கோட் படத்தின் ஆச்சரிய அப்டேட்கள்

இந்நிலையில் விடுதலை படத்தால் வெற்றிமாறன் ரொம்பவே மன உளைச்சலுக்கு இருந்தாராம். அதை தொடர்ந்து தயாரிப்பாளர் தாணுவுக்கு கால் செய்து ஏற்கனவே ரொம்ப ஸ்ட்ரெஸில் இருக்கேன். இப்போ வாடிவாசல் எடுக்கும் நிலையில் இல்லை. அதை கைவிட்டு விடலாமா எனக் கேட்டு இருக்கிறார்.

அதற்கு தாணு அதிர்ச்சியாகி நான் வாடிவாசலுக்கு ட்ரெயினிங் செஷனுக்கே 10 லட்சம் வரை செலவு செய்திருந்தேன். வாடிவாசலை படத்துக்கு சில வியாபாரமும் முடிந்துவிட்டது. அதை என்னால் எப்படி எடுக்க முடியும் என்றாராம். அதற்கு வெற்றிமாறனோ நான் தனுஷை வைத்து ஒரு படம் உங்களுக்கு இயக்கி தருகிறேன். என் சம்பளத்தில் அந்த தொகையை எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கேட்டாராம்.

இதனால் வாடிவாசல் படம் நடக்குமா? நடந்தால் பாலிவுட்டில் பிஸியாகி இருக்கும் சூர்யாவால் கலந்துக்கொள்ள முடியுமா? அவர் இல்லாமல் இன்னோரு நடிகரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என பல குழப்பங்கள் உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: இயக்குனர் சொன்னதை அப்படியே செஞ்ச ரஜினிகாந்த்… ஓவர் சீன் போட்ட இன்னொரு நடிகர்..

 

Related Articles

Next Story