கங்கை அமரனிடம் இந்த அளவுக்கு நெருக்கமா?.. பொறாமைபடும் அளவுக்கு நடந்து கொண்ட சில்க்..

by Rohini |   ( Updated:2023-03-02 16:15:50  )
silk
X

silk

தமிழ் சினிமாவில் ஒரு நடிகைக்கு உண்டான அந்தஸ்தையும் மீறி அதிக அளவு ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் பார்க்க வைத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 80களில் சினிமாவையே தன் கண்ணுக்குள் பொத்தி வைத்தவர். ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

silk1

silk1

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவருக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்தது. பிரபலங்கள் முதல் அனைவரும் விரும்பத்தக்க நடிகையாகவே மாறினார் சில்க் ஸ்மிதா. ஆனால் இவரின் இறப்பு இன்றளவும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரன் சில்க் ஸ்மிதாவை பற்றி சில விஷயங்களை கூறினார். கங்கை அமரனும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கங்கை அமரனுக்கு சில்க் போன் செய்து வீட்டிற்கு வரட்டுமா என்று கேட்டு வருவாராம்.

silk2

silk2

வீட்டிற்கு வந்து கங்கை அமரனின் மனைவியோடு சமையல் செய்து அனைவரோடும் மகிழ்ச்சியாக பழகுவாராம். அப்போது பிரேம்ஜி மிகவும் சிறு வயது என்பதால் ‘ நான் இவனை கல்யாணம் பண்ணிகிட்டுமா?’ என்று செல்லமாக கேட்பாராம். மேலும் ஸ்பாட்டிலும் சரி மற்ற இடங்களிலும் சரி கங்கை அமரனை பார்த்தால் ஓடி வந்து கட்டிக் கொள்வாராம் சில்க். இந்த விஷயத்தை மட்டும் சொல்லும் போது கங்கை அமரன் ‘யாரும் பொறாமை படாதீங்க’ என்று அந்த பேட்டியில் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் கங்கை அமரனை மச்சான் என்று தான் அழைப்பாராம். இந்த அளவுக்கு மிகவும் நெருங்கி பழகியிருக்கிறார்கள். மேலும் சில்கை பற்றி கங்கை அமரன் கூறும் போது ‘ஒரு கிராமத்தில் இருந்து வந்தவள் போல் தெரியாது. இன்று வரை அவளை போல் ஆடையிலும் சரி முக அலங்காரத்திலும் சரி யாராலும் ரசித்து ரசித்து தன்னை மெருகேற்ற முடியாது’ என்று கூறினார்.

silk3

silk3

அந்த அளவுக்கு சில்க் தன்னை தானே மெதுவாக செதுக்கி செதுக்கி சினிமாவிற்காகவே படைக்கப்பட்டவள் போல் மாறியவர் என்று கூறினார். ஆனால் இறப்பிற்கு அவரால் போக முடியவில்லை என்று அதற்கான காரணத்தையும் கூறினார். அதாவது நெருங்கிய நபர் ஒருவர் இறந்து விட்டால் அதை அவரால் ஜீரணிக்க முடியாதாம். ஒரு வார காலம் அவரை காய்ச்சலில் கொண்டு போய் விடுமாம். அதன் காரணமாகவே போகவில்லை என்றும் மயில்சாமி இறப்பிற்கு கூட போகாததற்கு அது தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : கொடூர விபத்தில் சிக்கிய ஜனகராஜ்… பிரபல காமெடி நடிகருக்கு வந்த அரிய வாய்ப்பு… ஆனால் சோகம் என்னன்னா?

Next Story