இத தொட்டா தமிழகத்தில் ஷாக் அடிக்குமே.?! இவருக்கு வேற வேலையே இல்லையா?!

by Manikandan |
இத தொட்டா தமிழகத்தில் ஷாக் அடிக்குமே.?! இவருக்கு வேற வேலையே இல்லையா?!
X

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை என தரமான தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித். தமிழ் திரைப்படங்களின் மூலம் தான் கூற நினைக்கும் கருத்துக்களையும் எந்தவித சமரசமும் இல்லாமல் சொல்லி வருகிறார் இயக்குனர் ரஞ்சித்.

ranjith

இவரின், ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் அதில் இவர் கூறும் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல குரல்கள் எழும். இவர், இயக்கும் படங்கள் நிச்சயம் தமிழகத்தில் ஒரு பேசுபொருளாக மாறிவரும் அளவிற்கு தனது கருத்துக்களை ஆழமாக தனது படங்களில் புகுத்தி விடுவார்.

பா.ரஞ்சித் தற்போது "நட்சத்திரங்கள் நகர்கின்றன" எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கலையரசன் காளிதாஸ், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

pa ranjith

தற்போது, இந்த படத்தில் என்ன கருத்து கூற வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, "LGBT COMMUNITY" எனும் தன்பால் ஏற்பாடுகளை மையப்படுத்தி அவர்களுக்கு எழும் பிரச்சனைகள் சமூகத்தின் பார்வையை இந்த படத்தில் பேச உள்ளாராம்.

இதையும் படியுங்களேன்-22 கோடிக்கு வீடு.! எந்த பயனும் இல்லை.! போயஸ் கார்டனில் புதிய கதை.!

மத்திய அரசு இதனை அங்கீகரித்தாலும் இன்னும் இந்த கருத்து தமிழகத்தில் தற்போது ஓரிரு இடங்களில் பேசப்பட்டு வருகிறது. இன்னும் வெளிப்படையாக பேசப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், இந்த படம் வெளிவந்த பின்னர் இது பற்றிய பேச்சுகள் விவாதங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Next Story