எல்லாம் சப்புனு போச்சே! வெளியான சிவகார்த்திகேயன் பட க்ளைமாக்ஸ்.. ரசிகர்கள் ஏத்துக்கவே மாட்டாங்க

Published on: June 15, 2023
siva
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்த நடிகராக வலம் வந்து  கொண்டிருக்கிறார்.கிட்டத்தட்ட ரஜினி, விஜய் வரிசையில் குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக மாறியிருக்கிறார்.

siva1
siva1

விஜய், ரஜினிக்கே உண்டான அந்த ஹுயூமர் சென்ஸ் சிவகார்த்திகேயனுக்கும் இருப்பதால் மிக குறுகிய காலத்தில் அனைவரையும் கவர்ந்து விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இவர் படங்களில் நடிக்க வந்த போது ஆரம்பத்தில் நகைச்சுவை மிக்க கதைகளிலேயே கவனம் செலுத்தி வந்தார்.

அதன் பின் மக்களின் மனதில் பதிந்த பிறகு ஆக்‌ஷன் நிறைந்த கதைகளிலும் நடிக்க ஆர்வம் காட்டினார். எல்லா வித கதைகளிலும் நடிக்க கூடிய ஒரு டாப் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது மாவீரன் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன் அடுத்தப் படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.

siva2
siva2

அடுத்ததாக கமல் புரடக்‌ஷனில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கும் சிவகார்த்திகேயன் அதற்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தினார்கள். ஆனால் காஷ்மீரில் பருவநிலை  காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் படக்குழு அங்கு படப்பிடிப்பை நடத்த முடியாமல் சென்னை வந்துவிட்டனர்.

இந்த நிலையில் இந்தப் படம் ஒரு ராணுவ வீரரை பற்றிய படமாக அமைய இருப்பதாகவும் அது பாகிஸ்தான் ராணுவத்தால் பிணைக்கைதியாக வைக்கப்பட்ட அபினநந்தனின் பயோபிக் என்றும் செய்திகள் வெளியான. ஆனால் அதுதான் இல்லையாம். இது வேறொரு ராணுவ வீரரின் பயோபிக்காம். ஆனால் பயோபிக்கில் அந்த ராணுவ வீரர் இறந்து விடுவாராம்.

siva3
siva3

அதனால் பயோபிக்கை சினிமாவிற்காக மாற்ற முடியாததால் அந்த கேரக்டரில் நடிக்கும் சிவகார்த்திகேயனும் படத்தில் இறந்து விடுவதுமாதிரியான க்ளைமாக்ஸைதான் வைக்க போகிறார்களாம். ஆனால் அதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்றும் புலம்பி வருகின்றனர். ஆனாலும் படத்தின் க்ளைமாக்ஸ் படம் பார்த்தவர்களை கனத்த இதயத்தோடுதான் வீட்டிற்கு போக வைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பணத்துக்காக இப்படியா?.. பிட்டு பட நடிகையாக மாறிய தமன்னா! விரக்தியில் ஜெயிலர் படக்குழு

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.