Cinema News
வேட்டையன் படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லையா? என்னடா இது புதுக்கதையா இருக்கு..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஞானவேல் இயக்கும் படம் வேட்டையன். ரஜினி படம் என்றாலே எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இங்கு தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், சித்ராலட்சுமணன் விவாதத்தின் போது இருவரும் இல்லை என்கிறார்கள். அது ஏன்னு வாங்க பார்ப்போம்.
உலகநாயகன் இந்தியன் 2 ரிலீஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது. கைதி 2, தனி ஒருவன் 2 என இந்த ரெண்டு படங்களும் அறிவிப்பில் மட்டுமே தான் உள்ளது. இதுவரை படப்பிடிப்பு சம்பந்தமா எந்த வேலையும் ஆரம்பிக்கல.
இதையும் படிங்க… எஸ்.பி.பி. செய்த வேலை.. கோபித்துக்கொண்டு வெளியேறிய எஸ்.ஜானகி!.. இப்படியா பண்ணுவாரு!..
ஒருபக்கம் கைதி 2 வை இயக்க வேண்டிய லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினி படத்தை இயக்க இருக்கார். தனி ஒருவன் 2 படத்தை இயக்க வேண்டிய ராஜா அடுத்து சிரஞ்சீவி படத்தை இயக்க இருக்காரு. இந்த நிலையில அந்த 2 படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு. அந்த வகையில கதாநாயகன், இயக்குனர் எல்லாரையும் தாண்டி ஒரு படத்தின் டைட்டில் உருவாக்கி இருக்குன்னா எப்படிப்பட்ட தாக்கத்தை அது கிரியேட் பண்ணியிருக்கு என்பது ஆச்சரியமாக உள்ளது என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கேட்கிறார்.
அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் இப்படி சொல்கிறார். நான் கூட அந்த ஆர்மெக்ஸ் மீடியா ரிப்போர்ட் வந்த உடனே நான் கால் பண்ணி கேட்டேன். ‘என்னங்க கைதி2, தனி ஒருவன் 2 எல்லாம் போட்டுருக்கீங்க. வரப்போற அந்தப் படத்தை எல்லாம் போடலாமே’ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க, ‘நாங்க 500 பேர் கிட்ட விசாரிக்கும்போது உங்க மைண்ட்ல டாப் அப் படம் எது இருக்குன்னா அவங்க எடுத்த உடனே சொல்றது லோகேஷ் கனகராஜின் கைதி 2, தனி ஒருவன் 2.’
ஏன்னா இதெல்லாம் ஐகானிக் படங்கள். இந்தப் படங்கள் பத்தித்தான் எங்களுக்கு எதிர்பார்ப்பு வரும். இது எப்போ வரும்? கோட், விடாமுயற்சி, குட் பேட் அக்லி வரப்போகிறது. என்றாலும் அவங்களுக்கு முதல்ல எதிர்பார்ப்பு கைதி 2, தனி ஒருவன் 2 தான்.
இதையும் படிங்க… ஹரா படத்தில் மோகன் நடிச்சதுக்கு காரணம்!.. ‘கம் பேக்’கா… ‘கோ பேக்-கான்னு படம் வந்தாதானே தெரியும்!
இதுதான் ஆடியன்ஸோட எதிர்பார்ப்பு. பேரே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் அரண்மனை தான். அதுல நாலு வரை வந்துட்டு. இந்தியன் 2வுக்கும் அந்த வகையில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. ‘அது எப்படி வேட்டையன் படம் மிஸ் ஆனது?’ன்னு தெரியல என்று சித்ராலட்சுமணன் கேட்க, அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் நானும் இதே கேள்வியைக் கேட்டேன்.
டாப் ஆப் மைண்ட்ல இருக்குற அந்த படங்களைத் தான் போடுறாங்க. இந்தப் படங்கள் எல்லாம் ஏன் போடலன்னு கேட்டா, ‘அவங்க சொல்லல. நாங்க போடல’ன்னு சொன்னாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.