Cinema News
இலவு காத்த கிளி போல மாறிய பிரசாந்த்! ‘அந்தகன்’ படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?
Andhagan Movie: தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இப்போது இருக்கும் விஜய், அஜித் புகழை 90களிலேயே தட்டி பறித்து ஒரு சார்மிங் ஹீரோவாக வலம் வந்தவர். ஆரம்பகாலங்களில் விஜய் அஜித்துக்கு போட்டியாக இருந்த ஒரே நடிகரும் பிரசாந்த்தான்.
இந்த நிலையில் பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் திரைப்படம் அந்தகன். இந்தியில் வெளியான அந்தாதூண் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த அந்தகன் திரைப்படம்.
இதையும் படிங்க: அடேய் யாரும் வராதீங்கடா.. இடமே இல்ல… தளபதி68ல் நடக்கும் களேபரம்… கலாய்க்கும் ரசிகர்கள்..!
இந்தப் படத்தில் பிரசாந்துடன் இணைந்து பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகிபாபு, வனிதா விஜயகுமார் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கும் படம். படம் ஏற்கனவே முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தை பிரசாந்தின் அப்பாவும் இயக்குனருமான தியாகராஜன் தான் இயக்கியிருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு அந்தகன் படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் பிரபுதேவாவின் நடனமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கவுதம் மேனனுக்கு சம்பளம் இத்தனை கோடியா?!.. பேசாம டைரக்ஷனை விட்டு நடிகராவே மாறிடலாம்!..
அதே வேளையில் அனிருத்துடன் இணைந்து விஜய்சேதுபதி இந்த படத்திற்காக ஒரு பாடலையும் பாடியிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் இந்தப் படத்தில் இருக்கும் நிலையில் ஏன் இந்தப் படம் வெளியாகுவதில் இவ்வளவு தாமதம் ஏன் சித்ரா லட்சுமணனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய சித்ராலட்சுமணன் ‘ஒரு படம் முடிக்கபட்டால் அந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்னால் படத்தின் தயாரிப்பாளர் அந்தப் படத்தை ஓடிடியிலும் சாட்டிலைட்டிற்கும் விற்றுவிடுவார். அதன் பிறகுதான் திரையரங்குகளில் படம் ரிலீஸாகும்.
இதையும் படிங்க: 7 மணி காட்சிக்கு ஏழரை தான்!.. கடைசி வரை லியோவுக்கு அனுமதியே கிடைக்கல.. தளபதி கணக்கு தப்பா போச்சே!..
ஒரு வேளை இந்த நிலைமை இன்னும் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு வராமல் கூட இருந்திருக்கும் என்பது என் கருத்து’ என சித்ரா லட்சுமணன் கூறினார். இதை பார்த்த ரசிகர்கள் ‘அந்தகன் படத்தை OTTயில் விற்று விட்டு தான் படம் வெளியிட வேண்டும் என்ற நிலையிலா தியாகராஜனின் பொருளாதாரம் இருக்கிறது. படம் வெற்றிப்படமாக அமைந்தால் பிறகு நல்ல விலைக்கு கூட OTT யில் வெளியிடலாமே’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.