இளையராஜா இசையில் ரஜினி நடித்த படம் படிக்காதவன். இதுல ரஜினி தம்பிக்காக பாடுபட்டு படிக்க வைப்பார். தம்பி தான் உலகம்னு நினைப்பார். அப்படிப்பட்ட தம்பி வளர்ந்ததும் அண்ணனை உதாசீனப்படுத்திட்டு நீ யாரோ நான் யாரோன்னு சொல்லிடுவார். இதைத் தாங்க முடியாமல் ரஜினி பாடும் பாட்டு தான் ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்.
தன்னோட காதலிக்கிட்ட புலம்பக்கூடிய பாடல் தான் இது. வைரமுத்து எழுதிய பாடல். இளையராஜா தோடி ராகத்தை அடிப்படையாக வைத்து இசையமைத்திருந்தார். ஜேசுதாஸ் குரலில் பாடல் ரம்மியமாக இருக்கும்.
இந்தப் பாடலை எழுதியதும் இயக்குனரிடம் வைரமுத்து ‘நான் மனசுக்கு நிறைவாக எழுதியிருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது மாற்ற வேண்டுமானால் சொல்லுங்க’என்றாராம். அதற்கு அவரும் படித்துப் படித்துப் பார்த்து விட்டு ‘எல்லாமே சரியா இருக்கு. நானும் ஏதாவது மாற்றலாம்னு தான் பார்க்குறேன். ஆனா முடியல. அப்படியே இருக்கட்டும். மிகச்சரியாக எழுதி இருக்கீங்க’ன்னு சொல்லிட்டாராம்.
இந்தப் பாடலில் கவிப்பேரரசு வைரமுத்து அண்ணன் தன்னைக் கருவேப்பிலையாகப் பயன்படுத்தி விட்டான் தம்பி என்பது போலவும், அவனுக்கு வளரும் வரை நான் ஏணியாக இருந்தேன். ஆனால் இன்றோ ஞானி என்றும் அழகாக வரிகளைப் போட்டுள்ளார். அதே பாடலில் பணம் காசைக் கண்டுபுட்டா புலி கூட புல்லைத் தின்னும் என்று அழகாக சொல்லியிருப்பார்.
இந்தப் பாடல் பதிவின் போது இளையராஜாவும் மெட்டு போட்டுவிட்டு வேறு படத்திற்கு சென்றுவிட்டாராம். இயக்குனரும் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டாராம். பொறுப்பை உதவியாளர் சுந்தரராஜனிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டாராம். வைரமுத்துவும் வேறு படத்திற்குப் பாட்டு எழுத சென்றுவிட்டாராம்.
இதையும் படிங்க… தளபதி பட விழாவில் இளையராஜா செய்த வேலை!.. ரஜினி அவரை ஒதுக்க காரணமாக இருந்த சம்பவம்!…
அந்த நேரத்தில் ஜேசுதாஸ் பாடல் பதிவிற்கு வந்து கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த நேரம் பார்த்து பாடல் எழுதிய பேப்பர் தொலைந்து போனதாம். என்ன செய்வது என்று தெரியாமல் கவிஞருக்கு சுந்தரராஜன் போன் செய்தாராம். அதன்பிறகு வரிகளைப் போனிலேயே அச்சுப் பிசகாமல் மனப்பாடமாக சொன்னாராம் வைரமுத்து. அப்படி உருவானது தான் அந்தப் பாடல்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யை…
Shrutika: தமிழ்…
தமிழக வெற்றிக்கழகம்…
Parthiban: இயக்குனர்…
சூர்யா 45…