Categories: Cinema News latest news

இப்படி ஒரு வேண்டுதலா?.. சென்னை அணிக்காக வரலட்சுமி சரத்குமார் என்ன செய்தார் பாருங்க!

தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் மற்ற மொழி திரைப்படங்களில் கிடைக்கும் அந்த வாய்ப்பு தமிழ்மொழி படங்களில் வரலட்சுமிக்கு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை.

varu1

அதனாலேயே தெலுங்கு திரைப்படங்களில் அவரை அடிக்கடி நாம் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் பற்றிய ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்கான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டியின் இறுதியில் சென்னை அணியும் குஜராத் அணியும் மோதிக்கொண்டன. சென்னை அணியின் கேப்டன் தோனிக்காக மற்ற ரசிகர்களும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தனர்.

அகமதாபாத்தில் நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் சென்னை அணி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியும் மக்களை மிகவும் வீதியடைய வைத்தது. பல பிரபலங்கள் கண்டு களித்த அந்தப் போட்டியில் கோலிவுட் சார்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ,வரலட்சுமி சரத்குமார் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உட்பட அனைவரும் பார்த்து கண்டு களித்தனர்.

varu2

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ஒரு மாதத்திற்கு சைவ உணவுகளையே சாப்பிடுவதாக வேண்டி இருந்தாராம். அசைவ பிரியரான வரலட்சுமி சரத்குமார் சென்னை அணிக்காக இப்படி ஒரு வேண்டுதல் வைத்திருப்பது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது.

Published by
Rohini