ரஜினியின் கடைசி படம் இதுதானா? என்ன முடிவில் இருக்கிறார்? பிஆர்ஓ சொன்ன சீக்ரெட்

by Rohini |
ரஜினியின் கடைசி படம் இதுதானா? என்ன முடிவில் இருக்கிறார்? பிஆர்ஓ சொன்ன சீக்ரெட்
X

rajini

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களை கடந்தும் இன்னும் சிங்கமாக கர்ஜிக்கும் ஒரே நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் ஏகப்பட்ட்ட அவமானங்களும் விமர்சனங்களும் பொதிந்து கிடக்கும். ரஜினி சினிமாவில் வரும் போதே கமல் ஒரு வளர்ந்த நடிகராகவே இருந்து வந்தார்.

rajini1

rajini1

அப்போதே ரஜினிக்கு நாம் எங்கே சினிமாவில் நிலைக்க போகிறோம் என்ற எண்ணம்தான் தோன்றியிருக்கிறது. ஆனாலும் துணிந்து கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்தார். அதுவும் கமல் படத்திலேயே கமலுக்கு வில்லனாகவும் நடித்தார். அந்த சமயங்களில் இருவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை வருங்காலத்தில் நமக்கு நாமே தான் போட்டியாக இருப்போம் என்று.

இன்று வரை தமிழ் சினிமாவை இரு பெரும் துருவங்களாக தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினியும் கமலும். இந்த நிலையில் ரஜினிக்கு பல வருடங்களாக PRO வாக இருப்பவர் ரியாஷ்.இவர்தான் விஜய்க்கும் தனுஷுக்கும் PRO வாக இருக்கிறாராம். அதனால் இவர்களை பற்றிய அப்டேட்கள் ரியாஷிடம் கேட்டால் தெரியும் என்ற அளவுக்கு அவர்களின் ரகசியங்களை தெரிந்தவராக இருக்கிறார் ரியாஷ்.

rajini2

rajini2

இதை பற்றி கேட்கும் போது ரஜினி தரப்பிலிருந்தோ விஜய் தரப்பிலிருந்தோ தனுஷ் தரப்பிலிருந்தோ இந்த விஷயங்களை சொல்லலாம், இதை சொல்லக் கூடாது என திட்டமிட்டு வைத்திருப்பார்களாம். அதன் பிறகே சொல்லுவாராம். மேலும் ரியாஷின் மகள் அப்பாவுக்கும் ரஜினி சாருக்கும் இடையே ஒரு வித வைப்ஸ் இருந்து கொண்டேதான் இருக்கும் என்றும் கூறினார்.

மேலும் எதாவது விழாக்களில் கலந்து கொள்ளும் போதும் ரியாஷ் ரஜினியையே பார்த்துக் கொண்டேதான் இருப்பாராம். திடீரென எதாவது சைகையிலேயே சொல்லுவாராம் ரஜினி. அதை உடனே செய்வதுதான் என் வேலை என்று கூறினார். மேலும் அவரின் கடைசி படம் குறித்து கண்டிப்பாக உங்களுக்கு தெரியும், அதை பற்றி கூறுங்கள் என்று அவரிடம் கேட்ட போது,

rajini3

rajini3

அதற்கு பதிலளித்த ரியாஷ் ‘எல்லாரிடமும் ஒன்று கேட்கிறேன், ரஜினி வாயாலயே இதுதான் கடைசி படம் என்று சொன்னாரா? ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் மட்டுமே வாய்வழியாக வந்தது, அவர் சொல்லவில்லையே? அப்புறம் என்ன?’ என்று நாசுக்காக கூறினார்.

இதையும் படிங்க : இதுக்குதான்யா புது டைரக்டருக்கு படம் பண்றது இல்ல! இயக்குனரால் கடுப்பான வாலி…

Next Story