Cinema History
டி ராஜேந்திரன் தாடிக்கு பின்னால் இருக்கும் லேடி இவரா??.. யாருக்கும் தெரியாத ரகசியத்தை உடைத்த அவரது நண்பர் தியாகு!!..
டி ராஜேந்திரன் திரைப்பட வாழ்க்கை பயணம்!!..
தமிழ் சினிமாவில் இன்று வரை நடிகர் டி ராஜேந்திரன் அவரைப் போன்ற ஒரு திறமைசாலியை இதுவரையில் யாரும் பார்த்திருக்க முடியாது. ஏனெனில் கதை, திரைக்கதை, வசனம்,டைரக்ஷன், நடிப்பு மற்றும் இசை என அனைத்து துறைகளிலும் திறமை மிகுந்த இவரைப் போன்ற ஒரு கலைஞர் இனிமேலும் தமிழ் சினிமாவிற்கு கிடைக்க வாய்ப்பில்லை.
அந்த வகையில் தற்சமயம் நடிகர் டி ராஜேந்திரன் தாடிக்கு பின்னாடி இருக்கும் ரகசியத்தை ஒரு நேர்காணலில் உடைத்திருக்கிறார் அவரது நண்பர் தியாகு. அந்த வீடியோ தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரும் அந்த ரகசியத்தை பற்றி தெரிந்து கொண்டார்கள்.
நடிகர் டி ராஜேந்திரன் அவர்கள் 1980 ஆம் ஆண்டு ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இவர் இந்த திரைப்படத்தில் எழுத்தாளராகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். முதல் படமே இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததன் மூலம் அடுத்த அடுத்த நிறைய திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
மேலும் வசந்த அழைப்புகள் எனும் திரைப்படத்தை இவரே நடித்து இவரை இயக்கியிருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதையும் படிங்க- ரஹ்மான்கிட்டயே போ!.. இனிமே என்கிட்ட வராத!. பாடகியிடம் கத்திய இளையராஜா…
இந்த நிலையில் நடிகர் டி ராஜேந்திரன் அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள்,இதில் மூத்த மகன் அனைவராலும் அறியப்பட்ட லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிலம்பரசன் ஆவார். இவர் நிறைய திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். தனது இரண்டாவது மகன் குறளரசன் ஆவார். இவர் இசையமைப்பதில் வல்லவர் ஆனால் தற்சமயம் இவருக்கு திரைப்படங்களில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
டி ராஜேந்திரன் அரசியல் பயணம்!!..
மேலும் டி ராஜேந்திரன் அவர்கள் திரைப்படத் துறையில் பணியாற்றி நிறைய சாதனைகளை புரிந்துள்ள நிலையில் அரசியலிலும் தனது பணியை தொடங்கினார். முதல் முதலாக திமுகவில் இணைந்து கொள்கையை பரப்பு செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.1996 ஆம் ஆண்டு பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
பிறகு 2004 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தார். பிறகு 2013 ஆம் ஆண்டு அந்த கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.
டி ராஜேந்திரன் தாடி வளர்த்த பின்னணி!!..
இந்த நிலையில் டி ராஜேந்திரன் அவர்களைப் பற்றி சமீபத்தில் அவரது நண்பர் தியாகு ஒரு நேர்காணலில் அவரது தாடியின் பின்னணி பற்றி பேசி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது,
நேர்காணலில் நடுவர் அவர்கள் டி ராஜேந்திரன் அவர்களின் தாடி வளர்த்த பின்னணி பற்றி தெரியுமா.??என்று கேட்க.. அதற்கு அவர் லவ் தாங்க காரணம்.. வேற என்ன இருக்க முடியும்.. இல்லைன்னு சொல்ல சொல்லுங்க அவர.. அந்தப் பொண்ணு பேரும் உஷா தான்.. உடனே நடுவர் உங்களிடம் அவர் சொன்னாரா என்று கேட்க.. எனக்கு தெரியுங்க அவன் என்ன சொல்றது உஷாவை தான் லவ் பண்ணினாரு.. அந்த பொண்ணு அவங்க தங்கி இருக்கிற தெருவுல தான் அவங்க வீடு.. ஆனா அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றத வீட்ல சம்மதிக்கல அதனால பிரிஞ்சிட்டாங்க.
அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் அந்த தாடியை வச்சிருக்கார். மேலும் நடுவர் அவர் எப்பயுமே தங்கச்சி சென்டிமென்ட்ல நிறைய பாடல்களை எழுதி இருக்காரு அத பத்தி என்ன சொல்றீங்க அப்படின்னு கேட்க..அவருக்கு தங்கச்சி என்றால் அவ்வளவு பிடிக்கும்.. அவங்க பேரு ஷியாமளா சிறுவயதிலிருந்தே அவங்க மீது ரொம்ப பாசமாய் இருப்பாரு, அதன் காரணமாகவே திரைப்படங்களிலும் தனது தங்கச்சியை நினைவு கூறுவதற்காக நிறைய பாடல்களை தங்கச்சி சென்டிமென்ட் வைத்து இயக்கியிருக்கிறார்.
இப்படி நடிகர் தியாகு அவர்கள் டி ராஜேந்திரன் பற்றி நிறைய சுவாரசியமான தகவல்களை அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க- ரஹ்மான்கிட்டயே போ!.. இனிமே என்கிட்ட வராத!. பாடகியிடம் கத்திய இளையராஜா…