
Cinema News
தளபதி 66-ல் ஓப்பனிங் சாங் பாடப்போவது இவரா?!… அப்போ கண்டிப்பா வேற லெவல் ஹிட்தான்!…
‘தளபதி 66” குறித்து அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளார். விஜய்க்கு அண்ணனாக மைக் மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வந்தது .கதையின் படி சரத்குமாரின் 3வது மகனாக விஜய் நடிக்க உள்ளார்.
தளபதி 66 படத்திற்கு பாடல்வரிகள்,தமிழ்வசனங்கள்,திரைக்கதை ஆகியவற்றை பாடலாசிரியர் விவேக் எழுதுவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கான இசையை இரவுபகலாக தயார் செய்கிறார் தமன் .பாடல் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் தில் ராஜ் கூடவே இருந்து பார்த்துக்கொள்கிறாராம்.
விஜயின் அரபி குத்து பாடல் செம ஹிட் அடித்ததை தொடர்ந்து அதே செட் தான் வேணும் என்று விஜய் கேட்டுக்கொண்டதை அடுத்து சென்னையில் காட்சிகளை படம் பிடிக்க திட்டமிட்டுள்ளனர் .
தளபதி 66 பாடல் உருவாக்க இருப்பதாகவும் அந்த பாடலை விஜய் பாட உள்ளதாகவும் கூறப்படுகிறது
தமன் விஜய் படத்துக்கு இசையமைக்க நீண்ட நாள் காத்திருந்தாராம்.இந்த படம் தமிழ் ,தெலுங்கு என 2 மொழிகளில் உருவாக்க உள்ளது,இதில் தமிழில் விஜய்க்கு 80கோடி சம்பளமும் ,தெலுங்கில் 40கோடி சம்பளமும் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.