இளையராஜா கொடுத்த சவாலான மெட்டுக்கு பாடல் எழுதி அசத்திய வைரமுத்து. அது எந்தப் பாடல் என்றால் அது தான் முதல் பாடல். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற அந்தப்பாடல். முதல் பாடலிலேயே முத்தாய்ப்பாகக் காட்டிவிட்டார் வைரமுத்து. இவர்கள் இருவருக்கும் ஒத்துப்போகக் காரணமே மண் சார்ந்த ஒரு ஈர்ப்பு தான். இருவரும் இயற்கை நேசர்கள். அதனால் தான் உயிர்ப்புடன் கவிதையும், இசையையும் கொடுக்க முடிந்தது.
இதையும் படிங்க… இனிமே ரசிகர்களை ஏமாத்த முடியாது.. அரசியலுக்கு போறேன்!.. எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!…
மணிரத்னத்தின் இதய கோவில் படத்திற்குப் பிறகு சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால் இருவருமே வேறு வேறு பக்கங்களில் பயணப்படுகின்றனர். ஒருவர் என் இசை உயர்வு என்றால் இன்னொருவர் என் கவிதை உயர்வு என்கிறார்.
86க்குப் பிறகு இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் பிரிவு ஏற்பட்டது. சரியான காரணம் என்பது இருவருக்கும் மட்டும் தான் தெரியும். இளையராஜாவைப் பொருத்தவரை எப்போதுமே அவரது பாடல்களில் முதல் வரியை அவர் தான் சொல்வாராம். அவரே பெரிய கவிஞர். இருவருக்கும் 10 வயது வித்தியாசம். ஒரே தட்டில் சாப்பிடும் அளவு நெருக்கமானவர். அதே போல வைரமுத்துவைப் பொருத்தவரை யாராவது பாடலில் வரிகளை மாற்ற வேண்டும் என்றால் அதை அவரிடம் முறைப்படி சொல்ல வேண்டும். அவர்களாக மாற்றக்கூடாது. இருவருமே தனிப்பட்ட முறையில் ஆளுமையானவர்கள். அதன் விளைவு தான் இவர்களது பிரிவு. இதனால் தமிழ் சினிமாவுக்குத் தான் இழப்பு.
காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை பாடல்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும். ராமன் உண்மையானவளா, சீதை உண்மையானவளா என்றால் சீதை கொடுமையை அனுபவித்தவள். ஒரு போதும் ராமன் அவளை நிம்மதியாக இருக்கவிட வில்லை. அவளுக்கு இறங்குகிறார் கவிஞர். சிப்பிக்குள் முத்து படத்தில் வந்த மனசு மயங்கும் பாடலின் வரிகள் அற்புதமானவை.

“கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய். மன்னன் உன்னை மறந்ததென்ன? உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன? தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்… நீதி மட்டும் உறங்காது… நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு…” சீதையின் கண்ணீரில் மொத்த கானகமும் நனைந்தது. ஒரு ஆண் மகனின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்ட பாட்டு. இப்படி அழுத்தமான வரிகளை எழுதியவர் வைரமுத்து. பாடலுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. இவர்களது காம்பினேஷனை மறக்கவே முடியாது.
