பட வாய்புகள் குறைந்ததற்கு காரணம் இதுதானா..? லீக்கான ஸ்ரீதிவ்யா செய்த சேட்டைகள்.!

தமிழ் சினிமாவில் இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தை தொடர்ந்து காக்கி சட்டை, ஜீவா, வெள்ளக்கார துறை, ஈட்டி, மருது என சில படங்களில் நடித்தார்.
இந்த படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார்.கவர்ச்சியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால், பெரிதாக இவரு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையும் படியுங்களேன்- வேட்டிகள் பலவிதம்.. மாளவிகா தனிவிதம்… தோழி பற்றிய அந்த ரகசியத்தை வெளிச்சம் போட்டு காட்டீங்களே…
தொடர்ந்து ஹோம்லி லுக்கில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யாவுக்கு எதற்காக பட வாய்ப்புகள் வரவில்லை என பல ரசிகர்கள் யோசித்தது உண்டு. ஆனால், பட வாய்ப்புகள் வராமல் போனதற்கு காரணமே ஸ்ரீதிவ்யா தானம்.
ஏனென்றால், ஸ்ரீதிவ்யாவுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் படத்தின் கதை, ஹீரோ யார் என எந்த விஷியத்தையும் கேட்கமாட்டாராம். தனக்கு 60 லட்சம், 70 லட்சம் வேண்டுமென்று தனது சம்பளத்தை கேட்டுவிடுவாராம். சிறிய படங்கள் எடுப்பவர்கள் ஸ்ரீதிவ்யாவிடம் சென்றாலே அவர் கேட்கும் சம்பளத்தாலே பாதி இயக்குனர்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.
மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாகவும், விக்ரம் பிரபுவிற்கு ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.