பிஸ்ட் படத்தின் மொத்த வசூலும் இவ்ளோதானா ?? முழு ரிப்போர்ட் இதோ !!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தப்படம் ‘பீஸ்ட்’ . இந்த படம் ஏப் 13 ம் தேதி வெளியானது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 165 கோடியாகும்,
விளம்பரத்திற்கான செலவு 8 கோடியாகும்,
வினியோகஸ்தர்கள் செலவு 2 கோடியாகும் ஆக மொத்த செலவு 175 கோடியாகும்.
இந்த செலவில்,நடிகர் விஜய் சம்பளம் மட்டுமே 80 கோடி.நெல்சன் திலீப்குமார் சம்பளம் மட்டுமே 8 கோடியாகும்
பீஸ்ட் படத்தின் வியாபாரம் 220 கோடியே 10 இலட்சம் ,இதில் 45 கோடியே 10 இலட்சம் வருவாய் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
பீஸ்ட் படம் வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையில் படத்தின் நிலவரத்தை பார்க்கலாம்,பீஸ்ட் படத்தின் சாட்டிலைட் உரிமம் ,டிஜிட்டல்,ஆடியோ உரிமத்தை சன் டிவி நிறுவனம் வேறு யாருக்கும் விற்க வில்லை.
தமிழ் நாடு தியேட்டர்களின் மூலம் சன் பிச்சர்களுக்கு கிடைத்த வருமானம் 57 கோடி ரூபாய் ஆகும்.
கேரளா தியேட்டர்களின் உரிமத்தை மேஜிக் பிரேம் நிறுவனம் 5 கோடியே 80 இலட்சத்துக்கு வாங்கியது.
கர்நாடக தியேட்டர்களின் உரிமத்தை தீராஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் 6 கோடியே 30 இலட்சத்துக்கு வாங்கியது.
ஆந்திர,தெலுங்கானா தியேட்டர்களின் உரிமத்தை தயாரிப்பாளர் தில் ராஜுயிடம் கொடுத்து சன் பிச்சர்ஸ் இந்த படத்தை வெளியிட்டார்கள்.மேலும் ஆந்திர,தெலுங்கானா இந்த படத்திற்கு கிடைத்த பங்கு 8 கோடியாகும்.
பீஸ்ட் படத்திற்க்காக வட இந்தியாவில் அதிகம் செலுத்தப்படவில்லை.அதனால் வட இந்தியாவில் இருந்து 2 கோடி தான் பங்கு கிடைத்துள்ளது.
ஓவர்சீஸ் தியேட்டர்களில் உரிமத்தை ஐங்கரன் இண்டெர்னேசனல் 2 கோடிதான் படத்தை வாங்கியது.
ஆக மொத்தம் இந்த படத்தின் மொத்த வியாபாரம் 206 கோடியே 10 இலட்சம் ரூபாய் ஆகும்.படம் வெளியாகி பல இடங்களில் எதிர்பார்த்த பங்கு வராததால் வருமானம் குறைத்துள்ளது.
இதுயெல்லாம் வைத்து கணித்தால் சன் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்த வருமானம் 31 கோடியே 10 இலட்சம் ஆகும்.
தமிழ் நாட்டை பொறுத்தவரை பீஸ்ட் படம் 555 இடங்களில், 830 திரைகளில் வெளியானது.படம் வெளியாகி 15 நாட்களில் மொத்த வசூல் 107 கோடியாகும்.இந்த படத்திற்காக தியேட்டர்களில் உரிமத்தொகை போக தயாரிப்பாளருக்கு கிடைத்த தொகை 60 கோடியாகும்.
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் படம் தயாரிப்பாளர் வெளியிடப்பட்டதால் படத்தின் மொத்த வசூலில் 5 சதவீதம் அதாவது 3 கோடி கிடைத்தது.இதனால் சன் பிச்சர்ஸ்க்கு 57 கோடிதான் கிடைத்த வருமானம் ஆகும் .
ஆக மொத்தம் பீஸ்ட் படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பில்லை.இது தான் பீஸ்ட் படத்தின் வருவாய் ஆகும்.
பீஸ்ட் படத்தின் பங்கு அதற்கு முன் வந்த விஜய் படத்தின் பங்கை விட 20 மடங்கு குறைவு.