கைமாறுகிறதா விடாமுயற்சி? அப்போ லைக்காவின் நிலைமை? எல்லாம் அஜித் கைலதான் இருக்கு
அஜித் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் படம் விடா முயற்சி. இந்தப் படம் ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவதாக சில தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன. படத்திற்கான ஸ்கிரிப்டையும் மகிழ்திரு மேனி எழுதி வந்ததாக கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் விடாமுயற்சி படம் ட்ராப் ஆகுவதாகவும் சில வதந்திகள் பரவி வந்தன. ஆனால் அது உண்மை இல்லை என்றும் கோடம்பாக்கத்தில் கூறினார்கள். அதற்கு ஏற்றவாறு விடா முயற்சி படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்குவதாகவே தெரியவில்லை.
இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டு குறித்து பேசப்பட்டு வருகிறது. அதில் ஏதோ ஒரு வகையில் லைக்கா நிறுவனத்திற்கு பெரிய அடி ஏற்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் விடாமுயற்சியில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக 100% தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன.
ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குவதாக கூறும் நிலையில் இன்னும் த்ரிஷாவிற்கு உரிய அக்ரீமெண்ட் அட்வான்ஸ் தொகையும் இன்னும் கொடுக்கப்பட வில்லையாம். அதை லைக்கா நிறுவனத்திற்கு மிகவும் நெருங்கிய வட்டாரங்கள் தான் பார்த்துக் கொள்ளுமாம் .ஆனால் அவர்களே சில பல காரணங்களால் இந்த ரெய்டில் மாட்டிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இதனால் அஜித், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுத்து விடலாம் என்றும் அதன் பிறகு த்ரிஷாவிற்கு உரிய காட்சிகளை அவருக்கு அட்வான்ஸ் கொடுத்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறாராம். இதற்கிடையில் இன்னொரு செய்தியும் கசிந்து வருகிறது. இந்த விடாமுயற்சி படத்தை முதலில் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருந்ததாம்.
அந்த நிறுவனம் முதலில் அஜித்திற்கு 79 கோடி சம்பளத் தொகை பேசினார்களாம். ஆனால் அஜித் 100 கோடி கேட்டதாகவும் இதை அறிந்த லைக்கா நிறுவனம் கூடுதலாக 105 கோடி கொடுத்து அஜித்தை லாக் செய்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால் இப்போது லைக்காவிற்கு இருக்கிற பிரச்சினையால் மீண்டும் விடா முயற்சி படம் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு போகும் சூழ்நிலையில் இருப்பதாகவும் பேசி வருகிறார்கள்.