
Cinema News
விக்கி – நயன் உறவில் விரிசலா?.. இது தான் காரணமா?..
கடந்த ஆண்டு ஜுன் மாதம் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர் நடிகை நயன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். இருவரும் கிட்டத்தட்ட 7 வருடங்களாக காதலித்து ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணம் மிகப்பிரம்மாண்டமாக சென்னை மகாபலிபுரத்தில் பலத்த ஏற்பாடுகளுடன் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரபலங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கோலாகலமாக நடந்தேறிய இவர்கள் திருமணம் தமிழ் சினிமாவிற்கும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

nayan vikki
அதன் பின் குழந்தை விவகாரம் என அந்த பிரச்சினையில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தனர். இதெல்லாம் முடிந்து ஒரு வழியாக இருவரும் சேர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்திற்கான வேலைகளில் இறங்க தயாராக காத்துக் கொண்டிருக்க ஒரு வித பிரச்சினைகளால் அந்தப் படமும் கை நழுவி விட்டது.
லைக்கா நிறுவனத்திடம் விக்னேஷ் சிவனுக்காக நயன் எவ்ளோ போராடியும் ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து எதிர்மறையான கருத்துக்கள் இதுவரை வரவில்லை. அந்தப் பிரச்சினையை மிகவும் கூலாக சமாளித்தார்.

nayan vikki
இந்த நிலையில் வெளியில் இருந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயனுக்கு பெரிய பிரச்சினையை கிளப்பி வருகின்றனர். அதாவது இருவருக்கும் இடையில் ஏதோ உரசல் இருப்பதாகவும் அதனால் இருவரும் பிரியக்கூடிய சூழ்நிலை நிலவலாம் எனவும் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க : நெருங்கிய நண்பர்!.. ஆனாலும் ஜெய்சங்கர் இறப்புக்கு போகாத ரஜினி.. என்ன காரணம் தெரியுமா?…
இப்பொழுது தான் ஏகே 62 பிரச்சினை ஓய இந்த புதுப் பிரச்சினையை கிளப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் இருவரும் அந்த அளவுக்கு புரிந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அதன் பிறகே திருமணம் செய்திருக்கின்றனர். அப்படி இருக்கையில் இந்த மாதிரி முடிவை எடுக்க வாய்ப்பே இல்லை என்றும் சில தரப்பினர் கூறிவருகின்றனர்.