இதற்காக தான் திருமணம் ஆனதை மறைத்தேன்… முதன்முறையாக கூறிய இசைவாணி – வீடியோ

Published on: December 3, 2021
isaivani .jpg dp
---Advertisement---

நான் திருமணம் ஆனதை மறைத்ததற்கு இது தான் காரணம் – இசைவாணி வெளிப்படை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்ட பிரபல போட்டியாளராக பேமஸ் ஆனவர் இசைவாணி. வட சென்னையை பூர்விகமாக கொண்ட இவருக்கு 24 வயது தான் ஆகிறது. ஆர்மோனியம் கலைஞருக்கு மகளாக பிறந்து இசையில் ஊறி வளர்ந்திருந்தாலும் அப்பாவுக்கு கிடைக்காத வாய்ப்புகள், அப்பா சம்பாதித்த அவமானங்கள் வாழ்வின் அனுபவமாக எடுத்துக்கொண்டார்.

ஆரம்பித்தில் அப்பாவுடன் கச்சேரிகளுக்கு சென்றவர் நிறைய ஒப்பாரிப் பாடல்கள் பாடியிருக்கிறரார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை கிடைத்த சிறிய இடத்தில் எல்லாம் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட இவர் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்தின் The Casteless Collective குரூப் பாடிய மாட்டு கரி அரசியலை எடுத்துரைக்கும் வகையில் ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார்.

isaivani
isaivani

ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் பச்சைக்கல்லு மூக்குத்தி பாடலை பாடி பாராட்டப்பட்டார். அதன் பிக்பாஸ் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதில் விருப்பு வெறுப்பு காட்டாமல் நல்ல போட்டியாளராக ஆடியன்ஸை கவர்ந்த இசைவாணி அந்நிகழ்ச்சிக்கு பெரிதும் சுவாரஸ்யம் இல்லாதவர் என்பதால் வெளியேற்றப்பட்டார்.

இதையும் படியுங்கள்: மீண்டும் தமிழ் படவாய்ப்பை கைப்பற்றிய ரித்து வர்மா.. அதுவும் மாஸ் ஹீரோவுடன்

isaivani
isaivani

இவர் பிக்பாஸில் இருக்கும் போது தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற செய்தி புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இசைவாணி சொல்லமால் மறைத்துவிட்டதாகவும் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் எனவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு திருமணம் நடந்தது குறித்தும் அது விவாகரத்தில் முடிந்து விட்டதை குறித்தும் முதன் முறையாக பேட்டி ஒன்றில் மனம் திறந்தார்.

அப்போது, ” எனக்கு திருமணம் ஆனதை மறைத்துவிட்டதாக பலர் என்னிடம் கேட்டு என்னை மன வருத்தத்தில் ஆழ்த்தினர். ஆனால், நான் மறைக்கவில்லை. அதை நான் தனிப்பட்ட பிரச்சனையாக கொண்டு வரவும் இல்லை. அந்த விஷயம் தேவையில்லை என்று நினைப்பதால் அதைப்பற்றி நான் பேசவில்லை என கூறி அத்தோடு அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment