இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி பெரிய கறி என்ற பாடலின் மூலம் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இவர் உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்து அவரை பெருமைப்படுத்தியது.
தொடர்ந்து மேடை கச்சேரிகளில் பாடல் பாடி புகழ் பெற்று உலகமறிந்தார். இதன் மூலம் கிடைத்தது தான் பிக்பாஸ் வாய்ப்பு. ஆம், கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் திருமணம் ஆகாத பெண் என இதுவரை எல்லோரும் நினைத்திருந்தோம். ஆனால் அவருக்கு திருமணம் ஆகி விவகாரத்து ஆகிவிட்டது என்பது அவரின் நண்பர்கள் மூலம் உண்மை கசிந்துள்ளது. 2019ல் டிரம்ஸ் இசைக் கலைஞர் சதீஷ் என்பவரை இஷ்டப்பட்டு திருமணம் செய்துக்கொண்ட இசைவாணி பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பினால் சட்டப்படி விவகாரத்து செய்துக்கொண்டாராம்.
அந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இசைவாணியை நண்பர்கள் நாங்கள் எல்லோரும் சேர்ந்து தான் அதிலிருந்து அவரை வெளியே கொண்டுவந்தோம். மீண்டும் அதை பற்றி கூறினால் மனஉளைச்சலுக்கு ஆளாக்குவேன் என எண்ணி அவர் இதை சொல்லாமல் மறைந்திருக்கலாம் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
