படமே துவங்கல.. அதுக்குள்ள பஞ்சாயத்தா!.. கமல் - சிம்பு படத்திற்கு வந்த சிக்கல்!...

by சிவா |
simbu
X

தமிழ் திரையுலகில் எப்போதும் சர்ச்சையில் சிக்கும் நடிகர் என்றால் அது சிம்பு மட்டுமே. படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார், தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார், அவரால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும், திடீரென சம்பளத்தை உயர்த்தி கேட்டு தயாரிப்பாளருக்கு தலைவலியை கொடுப்பார் என அவர் மீது பல புகார்கள் உண்டு.

ஆனாலும், அவ்வப்போது அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவதால் இவரின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை. சில வருடங்கள் படமே இல்லாமல் இருந்த சிம்பு திடீரென ‘விண்ணை தாண்டி வருவாயா’ எனும் ஹிட் படத்தை கொடுத்தார். அதன்பின் உடல் எடை கூடி அங்கிள் போல மாறினார். அதன்பின் நடித்த சில படங்கள் ஓடவே இல்லை. ஒருவழியாக மிகவும் சிரமப்பட்டு உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி ‘மாநாடு’ படத்தில் நடித்தார். அந்த படம் நல்ல வசூலை பெற்றது.

இதற்கிடையில் சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை தயாரித்து சில கோடிகள் நஷ்டப்பட்ட தயாரிப்பளர் மைக்கேல் ராயப்பன் மாநாடு பட ரிலீஸின் போது தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டையை போட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் சிம்புவுக்கு உதவ முன்வந்தார். மைக்கேல் ராயப்பனை ஆஃப் செய்த அவர் அதற்கு பதில் சிம்புவிடம் ‘என் தயாரிப்பில் தொடர்ந்து 3 படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என ஒப்பந்தம் போட்டார்.

isari

எனவே, அந்த படத்திற்கு பின் அவரின் தயாரிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்தார். ஆனால், அடுத்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் ‘பத்து தல’ படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை. இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

simbu

இதனால் கோபமடைந்த ஐசரி கணேஷ் ‘எனக்கு இன்னும் 2 படங்களில் நடித்து கொடுக்காமல் சிம்பு யார் படத்திலும் நடிக்க கூடாது’ என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துவிட்டார். இத்தனைக்கும் கமலும், ஐசரி கணேசனும் நல்ல நட்பில் இருப்பவர்கள்தான். ஆனால், ஐசரி கணேசன் கூறிய பிறகும் கமல் அதை கண்டுகொள்ளவில்லை என்பதால் ஐசரி கணேசன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story