மன அழுத்தம் போக்கும் ஈஷா யோகா வகுப்பு!

by சிவா |
isha
X

மன அழுத்தம் உள்ளிட்ட உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் 7 நாள் ஈஷா யோகா வகுப்பு கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

இவ்வகுப்பு ஜூலை 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை காந்திபுரம், பீளமேடு, ஆர். எஸ் புரம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவில்பாளையம், சிங்காநல்லூர், செல்வபுரம், மற்றும் சோமனூரில் ஆகிய இடங்களில் நடைபெறும்.

தினமும் இரண்டரை மணி நேர நடைபெறும் இவ்வகுப்பில் ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற தொன்மையான சக்திவாய்ந்த தியானம் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியை தினமும் செய்வதன் மூலம் மனம் குவிப்புத்திறன் அதிகரிக்கும், மனதில் தெளிவு ஏற்படும், உணர்வில் சமநிலை உருவாகும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

Next Story