
Cinema News
வாங்குனது 3 கொடுத்தது 1… அவசரப்பட்ட ஐசரி கணேஷ்… அல்வா போல் ஆட்டைய போட்ட சிம்பு..
Ishari Simbu: கோலிவுட்டின் முன்னணி நாயகனான சிம்புவிற்கும் பிரச்னை என்பது ஓயவே ஓயாது போல. நன்றாக வளர்ந்து வந்த சமயத்தில் நடிகைகள் ஹன்சிகா, நயனுடன் காதல் சர்ச்சை. தொடர்ந்து ஷூட்டிங் சரியாக செல்லாமல் கால்ஷூட்டை காலி செய்து தன்னுடைய கேரியரையே தொலைத்தார்.
அடுத்து லாக்டவுன் காலத்தில் தன்னுடைய உடலை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி அட்மேனாக ஒரு கம்பேக் கொடுத்தார். அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனா மீண்டும் சிம்புவை குறித்த ஒரு சர்ச்சை கோலிவுட்டில் வட்டமடித்து வருகிறது.
இதையும் படிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…
லாக்டவுன் சமயத்தில் சிம்பு நடிக்க ஐசரி கணேஷ் தயாரிப்பில் கொரோனா குமார் படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அந்த படத்தில் நடிக்காமல் மாநாடு படத்தில் இணைந்தார். அந்த படம் ரிலீஸாகிவிட தன்னுடைய படத்தில் சிம்பு நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமலின் ராஜ்கமல் ப்ரோடக்ஷன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
கமல் எனக்கு அண்ணன் மாதிரி அவருடைய படத்தில் பிரச்னை செய்ய மாட்டேன். அந்த படத்தினை முடித்து விட்டு என்னுடைய படத்துக்கு சிம்பு திரும்புவார் என ஐசரி கணேஷ் ஓபனாக பேசி இருந்தார். இதனை தொடர்ந்து தடாலடியாக 1 கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போது மொரிசியஸில் டூரில் இருக்கிறார் நடிகர் சிம்பு. இதற்கு முன்னரே தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கோர்ட்டினை நாடினார். சங்கத்துக்கு சென்று இருந்தால் கூட இந்த பிரச்னை சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் கோர்ட் சென்றதால் இந்த பிரச்னை பல வருடம் இழுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தளபதி மட்டும்தான் மோட்டிவேட் பண்ணுவாரா? ‘தல’ யும் பண்ணுவாரு – மார்க் ஆண்டனிக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?
அதை போன்ற ஒரு நிலைக்கு தற்போது ஐசரி கணேஷ் வந்து இருக்கிறார். 4 கோடி கொடுத்தேன் எனக் கூறினாலும் அவரிடம் சிம்புவிடம் ஒரு கோடி கொடுத்ததற்கே சான்று இருக்கிறது. இதனால் கோர்ட்டில் டெபாசிட்டாக ஒரு கோடி கட்ட சொல்ல அவர் தரப்பும் கட்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனால் சீக்கிரத்தில் முடிய வேண்டிய பிரச்னை தற்போது கோர்ட் வரை சென்று இருப்பதால் சிம்பு தரப்புக்கு உண்மையிலேயே 3 கோடி வரை லாபம் தான். மேலும், சிம்பு தரப்பும் கொஞ்சம் இறங்கி வந்து இந்த பிரச்னையை முடிப்பதே அவரின் கேரியருக்கு சரியாக அமையும் என்றும் சிலர் கிசுகிசுக்கின்றனர்.