சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சமீபத்தில் லால் சலாம் படத்தை இயக்கினார். அவரது தந்தை அதில் கேமியோ ரோலில் நடித்தார்.
இந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் சுமாராக இருந்தது. ஐஸ்வர்யா அடுத்ததாக ஒரு திட்டத்தில் இறங்கியுள்ளார். சித்து படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் சித்தார்த் ஐஸ்வர்யாவிடம் ஒரு கதையை சொன்னாராம். அவருக்கும் கதை பிடித்துவிட்டதாம். உடனே சித்தார்த் இதற்கான திரைக்கதையை எழுதவும் சொல்லிவிட்டாராம்.
இன்னும் படம் குறித்த அனைத்து விஷயங்களும் சரியானபடி நடந்தால் படம் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. இப்போதைக்கு இந்தப் படத்தைப் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லை. தயாரிப்பு நிறுவனம் எது என்பது பற்றியும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
அதே போல இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. அதாவது சித்தார்த்தின் இந்தப் படத்தில் ரஜனிகாந்தோ அல்லது வேறு நடிகரையோ வைத்து கேமியோ ரோல் எதுவும் இடம்பெறுவது இல்லையாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய முதல் படம் 3. தனுஷ், சுருதிஹாசன் இணைந்து நடித்து இருந்தனர். படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
அதே போல வை ராஜா வை படம் ஐஸ்வர்யா இயக்கிய 2வது படம். இதில் அவரது முன்னாள் கணவர் தனுஷ் கேமியோ ரோல் பண்ணினார். இந்த நிலையில் கேமியோ ரோல்கள் தனக்கு செட்டாகவில்லை என்பதால் இனி வரும் படங்களில் கேமியோ ரோலைத் தொடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஐஸ்வர்யா தனுஷ் தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ஐஸ்வர்யா இயக்குனர் மட்டுமல்லாமல் பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் உள்ளார். விசில், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் பாடியும் இருக்கிறார். விசில் படத்தில் நட்பே நட்பே என்ற பாடலையும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆசை தான் பாடலையும் பாடியுள்ளார். அதே போல ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்த ரீமாசென்னுக்கு டப்பிங் ஆர்டிஸ்டும் இவர் தான்.
ஐஸ்வர்யா, தனுஷ் ஜோடி பிரிந்த நிலையில் தன்னெழுச்சியாக ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்து இருப்பது பாராட்டத்தக்கது. லால் சலாமில் விட்ட கேப்பை இந்தப் படத்தில் நிரப்புவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…