Cinema History
ஏ.ஆர்.ரகுமானை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?.. பின்னணியில் இருப்பது யார்?!.. பகீர் தகவல்!..
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது வாங்கிக் கொடுத்த பாடல் ஜெய்ஹோ. சமீபத்தில் அவர் மேல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. ராம்கோபால் வர்மா ஒரு பேட்டியில் சொன்னாராம். ‘ஜெய்ஹோ’ அவர் பாட்டு இல்லை. சுகிந்தர்சிங் பாட்டு என்று சொன்னார். மேலும் இதற்கு இசை அமைக்க ரொம்ப நாள் இழுத்துக் கொண்டே இருந்தாராம். அப்போ அவர் யதார்த்தமா கோபப்பட்டு, “என் பேருக்குத் தானே பணம் கொடுக்கறீங்க. அது என்னோட இசையா இருந்தா என்ன? சுகிந்தரோட இசையா இருந்தா என்ன?”ன்னு கேட்டாராம்.
அப்படிப் பார்த்தா ஜெய்ஹோ பாட்டுக்கு மெட்டுப் போட்டவர் சுகிந்தர்சிங் தான் என்கிறார். உயிரே படத்தில் தக்க தையத் தய்ய பாடலை பாடியவர்தான் இந்த சுகிந்தர் சிங்.
இதையும் படிங்க… ஓவரா பேசிய அறந்தாங்கி நிஷா.. ஒரு நிமிஷம் பக்கத்துல வந்து ராகவா லாரன்ஸ் பார்த்த வேலை!..
தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இசை அமைப்பாளர்களை சொந்தமாக மெட்டுப் போட விடுவதில்லை. இளையராஜா கூட மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் பாடலை அப்படித் தான் கொஞ்சம் மாற்றிக் கொடுத்தார். இந்திய அளவில் உள்ள பல இசைக்கூறுகளை உள்வாங்கிக் கொண்டு தான் ரகுமானும் இசை அமைக்கிறார். ரகுமான் இரவு நேரங்களில் தான் வேலை பார்ப்பாராம்.
சுகிந்தர்சிங் மிகச்சிறந்த இசை அமைப்பாளர் என்றால் ஏன் ஏ.ஆர்.ரகுமானைப் பயன்படுத்த வேண்டும்? இன்னொன்னு சுகிந்தர்சிங் எந்த இடத்திலும் ஏ.ஆர்.ரகுமான் மேல் குற்றச்சாட்டை சொன்னதில்லை. இப்படி ஒருவேளை இன்னொரு இசை அமைப்பாளரின் மெட்டைத் திருடிப் பயன்படுத்தினால் எத்தனை காலம் அவர் அதை வைத்து தன் திறமை என்று சொல்ல முடியும்?
இன்று ரகுமான் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ், பாலிவுட், ஹாலிவுட் என பெயர் வாங்கியவர். இவர் வேறொருவரின் இசையைப் பயன்படுத்தினால் இத்தனை ஆண்டுகாலம் அவரால் எப்படித் தாக்குப் பிடிக்க முடியும்?
ரகுமான் இதுவரை யாரிடமும் கோபமாகப் பேசியதும் இல்லை. ரகுமானின் மீது குற்றச்சாட்டு வைக்க என்ன காரணம்? அவரைப் பொறுத்தவரை தமிழர். இஸ்ஸாமியராகத் தன்னை மாற்றிக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்கள் போல இன்று இந்திப் படங்கள் ஓடவில்லை. இதனால் ரகுமான் மேல் வெறுப்பு வரலாம்.
இதையும் படிங்க... பேனர் கிழிக்கத்தான் தெரியும்!.. பாக்ஸ் ஆபிஸில் கில்லியை தொடக் கூட முடியாத தீனா மற்றும் பில்லா!..
சமீபத்தில் அவரது இசைநிகழ்ச்சியிலும் குளறுபடிகள் நடந்தன. ஒரு காலத்தில் ரகுமானை இந்தியில் ஓரம் கட்டினார்களாம். மீண்டும் அவர் வந்துவிடக்கூடாது என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ரகுமானின் இசை தனிப்பட்ட இசை தான். ஆனால் மற்ற இசைகளின் தாக்கம் இருக்கலாம்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.